ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்

பல எச்சரிக்கை அறிகுறிகுறிகளும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெருமளவிலான ஆதாரங்களும் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதையே குறிக்கின்றன.கடந்த ஐம்பதாண்டுகளில், உலகம் முழுவதும் விந்து எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. அசாதாரண விந்தணு மாற்றங்களும், ஆண் மலட்டுத் தன்மையின் விகிதமும், பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது. கேள்வி என்னவென்றால், "ஏன்"? நாற்பதாண்டுகளாக ஃப்ளோரிடாவில் ஒரு மாசடைந்த ஏரியில் வாழும் அலிகேட்டர் முதலை இனத்தை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள், … ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 7

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 12 குழந்தைகளுடைய உண்மையான தந்தை யார் என்பது முன்பு போலவே இப்பொழுதும், அதிகபட்சமாகப் பார்த்தால், ஒரு தார்மீக நம்பிக்கையை ஆதாரமாக்க் கொண்டிருக்கின்ற விஷயமாகி விட்டது. தீர்வு காண முடியாத இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக Code Napoleon இன் 312வது ஷரத்து பின்வருமாறு உத்தரவிட்டது: ”மண வாழ்க்கையில் கருவுற்ற குழந்தைகளுக்குக் கணவனே தந்தை ஆவார்”. மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்ற ஒருதார மணத்தின் இறுதி விளைவு இதுதான். ஆக, தனிப்பட்ட … குடும்பம் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?

சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. … பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.