கோயா இன மக்கள் இடம்: ராஜாவோம்மங்கி காவல் நிலையம். நாங்கள் ஜீப்பை விட்டு இறங்கியதுமே, காவலர்கள் அவசர அவசரமாகத் தங்களுடைய இடங்களை நோக்கி பீதியோடு ஓடுகிறார்கள். இரும்புக்கோட்டை போன்ற பாதுகாப்போடு அந்தக் காவல் நிலையம் அச்சுறுத்துகிறது. காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. சிறப்புக் காவல் படையினர் காவல்நிலையத்தைக் கண் இமைக்காமல் காவல் காக்கிறார்கள். நாங்கள் வெறும் கேமிராவை ஆயுதமாகக் கொண்டு வந்திருப்பதைக் கண்டதும் பதற்றம் சற்றே குறைகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் இப்பகுதியில் காவல் நிலையங்களைப் புகைப்படம் … கொதித்தெழும் கோயா மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஆந்திரா
ஆந்திர துப்பாக்கிக் குண்டுகளை விடக் கொடிய குண்டுகள்
கடந்த 7ம் தேதி செம்மரக் கட்டைகளைக் கடத்தினார்கள் என்று கூறி ஆந்திர காவல்துறை ரவுடிகள் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொலைகள் போலியாக நடத்தப்பட்ட மோதல் கொலைகள் தாம் என்பது ஐயத்துக்கு இடமற்ற வகையில் தகவல்கள், ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளங்களில் பொங்கித் தீர்த்து விட்டார்கள் மக்கள். பழைய செம்மரக் கட்டைகளைக் கிடங்குகளிலிருந்து கொண்டுவந்து பழைய பதிவு எண்களை அழித்துவிட்டு காட்டியிருப்பது தொடங்கி, உடல்களில் தீக்காயங்கள் இருப்பது வரை பல்வேறு ஆதாரங்கள் இவ்வளவு … ஆந்திர துப்பாக்கிக் குண்டுகளை விடக் கொடிய குண்டுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?
வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில், குஜராத்தில் என்று தனித்து குறிப்பிடும்படி இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் நிறைந்திருக்கிற அரச பயங்கரவாதத்தின் கோர முகம் கடந்த நவம்பர் 27ம் தேதி மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. அன்றுதான் தோழர் கிஷன் ஜி கொல்லப்பட்டார். வழக்கம் போல போலீஸை சுட்டார், அதனால் நாங்கள் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கட்டுக் கதைகள் பரப்பிவிடப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து போலீஸ் வெறிநாய்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது தற்போது … இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 5
இதுவரை மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1 மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2 மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3 மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4 மின்னூலாக(PDF) தரவிறக்க
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4
மாவோயிச வன்முறை 4 ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் கடைசிப் பகுதியில் சில கேள்விகளை எழுப்புகிறார். முதலில் பொருளியலில் பின் தங்கியிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லையா? எனக் கேள்வி எழுப்பி தமிழகத்தின் தென்பகுதியில் தேரிக்காட்டில் டாடா டைட்டானிய ஆலை அமைக்க முற்பட்டதை மக்கள் ஜனநாயக போராட்ட வழிகளில் விரட்டிக் காட்டவில்லையா என எடுத்துக்காட்டும் வழங்கியிருக்கிறார். இந்திய சூழலில் நடப்பிலிருக்கும் ஜனநாயகமான வழிமுறைப் போராட்டங்களின் மூலம் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிராக மக்கள் வெற்றியைப் … மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3
ஆழ்மனதில் உறைந்து கிடப்பதும் பொதுப்புத்தியும் மாவோயிச வன்முறை 3 ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். "இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்" அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த … மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2
காயங்களும் நோய்களும் மாவோயிச வன்முறை 2 மாவோயிசம் பற்றி பேசுவதற்கு முன்னால் அதுகுறித்தான எங்கள் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்வது தேவையானதாகவும், சரியான புரிதலுக்கு உதவுவதாகவும் இருக்கும். மாவோயிஸ்டுகள் பற்றிய இந்த வெளியீட்டை படித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு, அவர்களின் செயல் திட்டம், உத்திகள் குறித்த எங்களின் நிலைக்கும், மாவோயிஸ்டுகள் குறித்த ஜெயமோகனின் புரிதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. மாறாக அவரின் நோக்கம், மாவோயிஸ்டுகளின் மீதான அவரது விமர்சனம் எந்த தளத்திலிருந்து வைக்கப்படுகிறது, எதனுடன் … மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்
ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி … ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?
கடந்த ஒரு மாதமாக ஆந்திரா எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டம் என்பது எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பது மீண்டுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராடியவர்களின் நோக்கம்...? தெலுங்கானா தனிமாநில கோரிக்கை அண்மையில் எழுந்ததல்ல. சந்திரசேகர ராவ் பதினோரு நாள் உண்ணாவிரதமிருந்ததால் தெலுங்கானா கிடைத்ததாக அவரது பக்தர்கள் புளகமடைந்து கொண்டிருந்தபோது, பிற மாநிலங்களிலும், ஆந்திராவின் பிற பகுதிகளிலும் தனிமாநில கோரிக்கைகள் திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டன. ஆந்திராவில் பின்னர் அதுவே தெலுங்கானாவிற்கு எதிர்ப்பாகவும், ஒருங்கிணைந்த ஆந்திரா என்றும் மடைமாற்றப்பட்டது. மக்கள் ஒரு பிரச்சனையை உணர்ந்து … தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.