குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி … டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஆனந்த விகடன்
கற்க கசடற விற்க அதற்குத் தக
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்
காணொளியில் புதியது 35 காவல் துறையை ஏவல் துறை என்பதெல்லாம் ரெம்ப பழைய வழக்கம். ரவுடிகள், வெறிநாய்கள், யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள் என்று பலவாறாக அழைத்துப் பார்த்தும் போதவில்லை. ஒவ்வொரு கணமும் புதுப்புது சொல்லை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் துறை. அண்மையில் நடந்த இவ்வாறான காவல் துறையின் மிருகத்தனமான சில நடவடிக்கைகளைத் தொகுத்து காணொளியாக்கி, காவல்துறை யாருக்கு நண்பன்? எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆனந்த விகடனின் இந்த காணொளி. … கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்
அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.