போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்

புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம். இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் … போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!

தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். … தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.