நடுவுல ‘U’ வந்துடுச்சா ரவி?

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க

சொல்லுளி டிச 22 இதழ்

டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை

மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் … ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்

அண்மையில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை ஒரு நிகழ்வில் பேசும் போது, ‘காவியும் ஆன்மீகமும் கலந்தது தான் இந்தியா’ என்று கூறியிருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, ‘சனாதனத்தினால் தான் இந்தியா உருவானது’ என்று கூறியிருந்தார். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான பொய்களையும் வரலாற்றுத் திரிவுகளையும் கூச்சமே இல்லாமல் கூவித் திரிவது பார்ப்பனர்களின் வேலைத் திட்டம். அதேநேரம், இதற்கு எதிராக வரலாற்றுத் தளத்தில் யாரேனும் கேள்வி எழுப்பினால் பக்தி இயக்க காலத்தை புறந்தள்ள … இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை

கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.