புண்பட்ட / புண்படாத இந்துக்கள்

கடந்த 15.9.2022 வியாழனன்று சங்கரன் கோவில் அருகே சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த தீண்டாமைக் குற்றம் நிகழ்ந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தியவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். மட்டுமல்லாது ஆறு மாதத்துக்கு அவர்கள் ஊருக்குள் வரக் கூடாது எனும் சிறப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி இருப்பது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறையாக இருக்கக் கூடும் என எண்ணுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் ஆ.ராசா வேதங்களில் சூத்திரர்கள் குறித்து … புண்பட்ட / புண்படாத இந்துக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆ.ராசா அதிர்வேட்டு ராசா

இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என்று ஆ.ராசா மீது காவி பயங்கரவாதிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆ.ராசா பேசிய அந்தப் பேச்சை கேட்காதவர்களைக் கூட, அப்படி என்ன பேசி விட்டார் ராசா என்று கேட்க வைத்து விட்டார்கள். அதற்கு அந்த பயங்கரவாதிகளுக்கு நன்றி சொல்லலாம். இந்துக்களை இழிவு படுத்தி விட்டார் என்று பயங்கரவாதிகள் கூக்குரல் போடுவதே இந்துக்களை இழிவுபடுத்துவது தான். அனைவரும் அர்ச்சகர் ஆகும் உரிமை என்று இந்து உரிமை பேசினால், பார்ப்பான் மட்டும் தான் … ஆ.ராசா அதிர்வேட்டு ராசா-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து என்பது யார்?

கந்த சஷ்டி கவசம் பிரச்சனைக்கு ஸ்டாலின் ஏன் பதிலளிக்கவில்லை? இந்துக் கடவுளா? தமிழ் கடவுளா? அது அவதூறா? இல்லையா? இடஒதுக்கீடு பிரச்சனை? மருத்துவ கல்லூரி இடங்களில் என்ன பிர்ச்சனை? புதிய கல்விக் கொள்கை? என நாலாபுறங்களிலும் சிக்சர்கள் பறக்கின்றன. எந்தப் பந்தை எப்படிப் போட்டாலும் அடிப்பது சிக்சர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளனுக்கும் விளையாட்டுக்கும் இடையிலிருக்கும் ‘யார் இந்து?’ எனும் மாயக் கண்ணாடியை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போடுகிறது என்பது தான் சிறப்பு. … இந்து என்பது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.