திமுகவின் திராவிடம் ஆரியமா?

கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, … திமுகவின் திராவிடம் ஆரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண் என்றால் அவ்வளவு இழிவா?

அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகலாய இந்தியாவில் நிலவுடமை உறவுகள்

இந்திய இடதுசாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுள் முதன்மையானது, இந்திய சமூகம் குறித்த பருண்மையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது. வரலாற்றியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் இந்திய சமூகம் குறித்த பருண்மையாக ஆய்வுகள் செய்யப்பட்டு அதனடிப்படையில் போர்த் தந்திரம், செயல் தந்திரம் வகுக்கும் போது மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை முன்னேறிச் செல்லும். அப்படியான ஆய்வுகளுக்கு, இந்திய சமூக வரலாற்றின் தவிர்க்க முடியாத பகுதியான முகலாயர்கள் ஆண்ட காலத்தின் நிலவுடமை உறவுகள் குறித்த புரிதலுக்கு, செய்யத் நூருல் ஹஸன் பாட்னா பல்கலைக் … முகலாய இந்தியாவில் நிலவுடமை உறவுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?

ஒவ்வொறு முறையும் அது மிக நிதானமாக, எல்லையில்லா வெறியுடன் பாய்ந்து குதறுவதும், பின் பதட்டமே இல்லாமல் தன் பற்களில் சொட்டும் குருதியை நாவால் தடவி ருசித்துக் கொண்டு கடந்து செல்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அடக்க முடியாது, பாய்ந்து குதறுவதற்காகவே அதை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது யார் மீது பாய்ந்து சிதைத்து துப்பி இருக்கிறது என்பதைக் கொண்டு (என்கவுண்டர்கள், கழிப்பறையில் வழுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளில்) பூப் போட்டு வாழ்த்துவதும் (ஜெயராஜ், … பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமக்கான மாற்று ஊடகம்

கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும். கம்யூனிச கல்வி இயக்கம் கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், “கருத்துப் பரப்பலில், அணி திரட்டலில் சமூக வலைத் தளங்களின் பங்கு” தோழர் கீற்று நந்தன் ஆற்றிய உரையின் நூல் வடிவம் இது. அச்சு காட்சி ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும், அவர்களின் அடிவருடிகளின் கைகளிலும் இருக்கின்றன. என்றாலும் அதே கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கின்ற சமூக ஊடகங்களை மக்கள் தங்கள் செய்திகளை கொண்டு செல்ல பரவலாக்க பயன்படுத்த முடியும். … நமக்கான மாற்று ஊடகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?

நேற்று (14 பிப்ரவரி 2020) இரவு சென்னை வண்ணார்பேட்டையில் நடந்து கொண்டிருந்த தொடர் போராட்டத்தில் காவல் துறையினர் உட்புகுந்து கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் இது முதல் கொலை. அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட போராட்டம் என்கிறார்கள். போராட்டம் நடத்துவதற்கு மக்கள் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அப்படி ஏதாவது ஒரு … என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்

இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.