வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்

‘மே தின வாழ்த்துகள் தோழர்’ ஒரு சடங்கைப் போல் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் சொற்றொடர். இது கொண்டாட்ட நாளல்ல. அன்னையர் தினம், ஒன்று விட்ட சித்தப்பா தினம் போல இது ஒரு ‘தினம்’ அல்ல. இனிப்பு, புது சட்டை எடுத்து பரிமாற்றிக் கொள்ளும் முதலாளித்துவ பண்டிகை அல்ல. மாறாக, எட்டு மணி நேர உழைப்பு எனும் மெய்யறிவை நம்மோடு, நாம் வாழும் சூழலோடு, நாம் ஆளப்படும் சூழலோடு பொருத்திப் பார்த்து, நம்மையும், உலகையும் மாற்றியமைக்கும் வழியில் … மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?

பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா? என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் … செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்

கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்துடன் அரசுகளுக்கு எதிராக நடந்த மாணவர்கள், இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசு ரவுடிகளின் வக்கிரமான வன்முறை வெறியாட்டத்தால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. அமைதியான, அறவழியிலான, இந்தியாவுக்கே முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் அரசினால் திட்டமிட்டு தீய்க்கப்பட்டிருக்கிறது. அரைநாள் நேரம் கொடுங்கள் நாங்களே கலைந்து செல்கிறோம் என்று மாணவர்கள் கோரினார்கள்,  பத்து மணி வரையாவது நேரம் கொடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார்கள். இரண்டு மணி நேரம் மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சிப் … தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

  அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.