கடந்த 09/02/2013 சனியன்று காலை எட்டு மணிக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் எனும் வழக்கில் அப்சல் குரு தூக்கிலப்பட்டிருக்கிறார். அஜ்மல் கசாப் தூகிக்கிலடப்பட்டதைப் போல் இரகசியமாக தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இதனால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காஷ்மீரில் இரண்டு நாட்களாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிலிருந்து வெளியாகும் அனைத்து நாளிதள்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயங்கரவாதியை(!) தூக்கிலிடுவதற்கு … அப்சல்குரு: நிரபராதியின் மரணத்தில் திருப்தியடைந்த இந்திய மனசாட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: இந்திய அரசு
மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்
நண்பர்களே, அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும், முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான … மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.