கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை

தங்கள் தோல்வியை மறைக்க ஊடகங்கள் துணையுடன் இஸ்லாமிய வெறுப்பை பரப்பி வருகிறது அரசு. மக்கள் முன்வைக்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பது தங்கள் கடமையல்ல என்று கறாராகவும், கண்ணும் கருத்துமாகவும் செயல்படுத்தி வருகிறது.  கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அரசு, தில்லி தப்லீக் மாநாட்டை முன் வைத்து கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்ற, வைரஸ் ஜிகாத் என்பது போன்ற வதந்திகள் மூலை முடுக்கெங்கும் பரவுவதை வேடிக்கை பார்க்கிறது. தப்லிக் மாநாட்டுக்கு முன்னும் … கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?

அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தி யார்?

இன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா? எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் … காந்தி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

நுழைவாயில் செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2 எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.  அம்பலப்படுத்தல் என்றால் என்ன?  எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்?  அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும்.  … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.