இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி – அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில்…

கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?

ஆயிரம் ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள‌லாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று…