வரம்பு மீறும் நீதிமன்றங்கள்

நீதி மன்றத்தின் அல்லது நீதிபதியின் ஆளுமை வரம்பு என்ன? எந்த அடிப்படையில் தீர்ப்பு கூறப்படுகிறது? கூறப்படும் தீர்ப்பிற்கு வழிகாட்டலாக இருக்கக் கூடியது என்ன? இதுபோன்ற கேள்விகளெல்லாம் நீதிபதிகளுக்கு எழுமா? எழாதா? நீதிபதிகள் தங்களைத் தாங்களே கடவுள்களாக கருதிக் கொள்ள முடியுமா? அவ்வாறாக கருதிக் கொள்ளும் நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டங்களாக ஆகுமா? நீதிபதிகளின் தீப்புகள் சட்டங்களுக்கான விளக்கங்களா? அல்லது சட்டங்களை மேலாதிக்கம் செய்யும் அளவுக்கு ஆற்றல் கொண்டவையா? அண்மையில் நீதி மன்றங்களின் தீர்ப்புகள் தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன. … வரம்பு மீறும் நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அசோகர் இந்துவா? முஸ்லீமா?

பொன்னியின்  செல்வன் என்றொரு திரைப்படம் வந்தாலும் வந்தது. ‘இ’னா ‘ஈ’யன்னா தெரியாவிட்டாலும் கூட இராஜராஜனைப் பற்றி பேசுவோம் என்று சமூக வலைதளங்களில் எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை இல்லாத அளவில் அன்றாட நாட்களில் கூட பெருங்கூட்டம் கூடுகிறதாம். வரலாற்றை அறிந்து கொள்வது குறித்த விருப்பம் தற்காலிகமாக சற்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர இந்த அலப்பல்களில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் எதையும் தன்னுடைய மேலாதிக்கத்துக்கு ஏற்ப திரிப்பதையே நோக்கமாகக் கொண்ட அதிகாரத்தில் … அசோகர் இந்துவா? முஸ்லீமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது பயங்கரவாத இயக்கம்?

நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

புண்பட்ட / புண்படாத இந்துக்கள்

கடந்த 15.9.2022 வியாழனன்று சங்கரன் கோவில் அருகே சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த தீண்டாமைக் குற்றம் நிகழ்ந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தியவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். மட்டுமல்லாது ஆறு மாதத்துக்கு அவர்கள் ஊருக்குள் வரக் கூடாது எனும் சிறப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி இருப்பது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறையாக இருக்கக் கூடும் என எண்ணுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் ஆ.ராசா வேதங்களில் சூத்திரர்கள் குறித்து … புண்பட்ட / புண்படாத இந்துக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆ.ராசா அதிர்வேட்டு ராசா

இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என்று ஆ.ராசா மீது காவி பயங்கரவாதிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆ.ராசா பேசிய அந்தப் பேச்சை கேட்காதவர்களைக் கூட, அப்படி என்ன பேசி விட்டார் ராசா என்று கேட்க வைத்து விட்டார்கள். அதற்கு அந்த பயங்கரவாதிகளுக்கு நன்றி சொல்லலாம். இந்துக்களை இழிவு படுத்தி விட்டார் என்று பயங்கரவாதிகள் கூக்குரல் போடுவதே இந்துக்களை இழிவுபடுத்துவது தான். அனைவரும் அர்ச்சகர் ஆகும் உரிமை என்று இந்து உரிமை பேசினால், பார்ப்பான் மட்டும் தான் … ஆ.ராசா அதிர்வேட்டு ராசா-ஐ படிப்பதைத் தொடரவும்.

சனாதனம் எனும் நஞ்சு

ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு … சனாதனம் எனும் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆதீனமா? அறிவற்ற ஈனமா?

அண்மையில் நடந்த மூன்று நிகழ்வுகள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. அறிவும், தன்மதிப்பும் கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ளக் கூடாத செய்திகள் அந்த நிகழ்வுகளில் இருக்கின்றன. 1. சிதம்பரம் நடராசர் கோவில் ஆவணங்களை, கணக்குகளை அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழுவுக்கு சரிபார்ப்புக்காக கொடுக்க மறுப்பதுடன் இதை ஒன்றிய பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் என்று இறுமாப்புடன் பேசும் தீச்சிதர்கள். 2. கிட்டத்தட்ட இதே விதயங்களுக்காக கோயில்களிலிருந்து அறநிலையத் துறை விலக … ஆதீனமா? அறிவற்ற ஈனமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?

அரபு நாடுகளில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்கிறார்கள். தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவிக்கிறார்கள், விளக்கம் கோருகிறார்கள். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார்கள். குப்பைத் தொட்டிகளில் செருப்பாலடித்த மோடியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். தோஹா சென்றிருக்கும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் கத்தர் அரசு நடத்தவிருந்த இரவு விருந்து ரத்து செய்யப்படுகிறது. இவைகளெல்லாம் நுபுல் சர்மா எனும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி … பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்

நீதி மன்றங்களின் உத்தரவுகள் எந்தவித திடுக்கிடலையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவை பெயரில் மட்டுமே நீதி மன்றங்கள் எனும் புரிதல் உண்டு. ஊடகங்கள் .. .. இந்தச் சொல்லை உச்சரிக்காமல் இருப்பதே நம்மை தாழ்த்திக் கொள்ளாமல் இருக்கும் வழி. ஆனால், அரசியல் கட்சிகள் ..? இந்தியாவிலிருக்கும் எந்த அரசியல் கட்சியும் இந்த அநீதியான, அராஜகமான, அறுவெறுப்பான, அலட்சியமான இந்த நீதிமன்ற உத்தரவுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்லாமல், முணுமுணுக்கக் கூட இல்லாமல் அசிங்கமான அமைதியைக் காக்கின்றனவே ஏன்? சில … ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?

இந்து எனும் சொல் பார்ப்பனிய அரசியலைக் குறிக்கும் சொல் என்று இடதுசாரிகள் தொடங்கி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி ஏமாற்றுவோர்கள் எல்லா மதங்களிலும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. இந்து என நம்பப்படுகின்ற பார்ப்பனிய மதத்துக்கும் பிற மதங்களுக்கும் உள்ள வித்தியாசமே இது தான். பிறவற்றில் மதத்தை சொல்லி கடவுளைச் … கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.