பில்கிஸ் பானு பேசுகிறேன்

எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட … பில்கிஸ் பானு பேசுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நச்சுப்புகை குண்டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்

"சரணடைந்து விடுங்கள். உங்கள் உயிரை காப்பதற்கும் தமிழ் மக்களின் வாழ்வை காப்பதற்கும் இதுவே கடைசி வழி" விடுதலைப்புலிகளுக்கு ராச பக்சேவின் கடைசி எச்சரிக்கை இது. விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்பதும் தமிழ் மக்களை கொன்று குவிப்பதும் இரண்டும் ஒன்றுதான் என்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இது தான். இதன் பொருள் விடுதலைப்புலிகள் சரணடையாவிட்டால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தான். எவ்வளவு வெளிப்படையான அறிவிப்பு. எந்த நாடும் இதை கண்டு கொள்ளவில்லை. ஐநா சபையில் மீண்டும் … நச்சுப்புகை குண்டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எச்சரிக்கை: தேர்தல் வருகிறது எச்சரிக்கை

          தேர்தல் நடப்பது ஒன்றே ஜனநாயகம் என்பதற்கு போதுமானது என்னும் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, கூடவே சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட அதன் வாசகங்களை உள்ளூர் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து அனுமதிபெறவேண்டும் என்பன போன்ற மக்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய கட்டுப்பாட்டு விதிகளையும் சேர்த்து. தேர்தல் என்பது என்ன மாதிரியான ஜனநாயகம் என்பது திருமங்கலம் இடைத்தேர்தல் நிரூபித்துக்காட்டிவிட்டது. கையூட்டு வாங்குவது குற்றம் என்றிருந்த நிலை மாறி தெரியாமல் வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் … எச்சரிக்கை: தேர்தல் வருகிறது எச்சரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல்

          விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துவரும் இலங்கை அரசு, தன்னுடைய சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா மூலம் ஓர் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய மருத்துவர் குழு இலங்கை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு விளக்கம் கூறுமுகமாக அமைச்சர் அதை அறிவித்திருக்கிறார். "இந்தியாவை குறை கூறாதீர்கள். அவர்களுடைய உதவி இல்லையென்றால் விடுதலைப்புலிகளை இந்த அளவிற்கு வெற்றி கொண்டிருக்க முடியாது" … இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழப்போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக்கட்சிகளின் கபடத்தனம்.

ஈழத்தமிழ் மக்கள் மீது மிகக்கொடிய இன அழிப்புப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை எச்சரித்து வெளியேற்றிவிட்டு, ஊடகங்களுக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் தடைவிதித்துவிட்டு, புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு, முல்லைத்தீவு மக்கள் அனைவரின் மீதும் குண்டு மாரி பொழிந்துள்ளது சிங்கள ராணுவம். முல்லைத்தீவின் பெரும்பகுதியை சுடுகாடாக்கி, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள புதுக்குடியிறுப்பு பகுதியில் தற்போது மூர்க்கமான இருதித்தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உயிரிழந்தவர்கலை அப்புறப்படுத்த இயலாததோடு, காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி சித்திரவதை அனுபவித்து மெல்ல மெல்லச்சாகும் கொடூரம் … ஈழப்போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக்கட்சிகளின் கபடத்தனம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடாமல் ஊட்டப்பட்டு வரும் கிரிக்கெட் போதை

          மதங்களைப்போல, சினிமா போல எல்ல உணர்வுகளையும் மழுங்கடிக்கும் ஒருவித மயக்கமாக கிரிக்கெட் இருக்கிறது என்பதை விளக்க இப்போதைய சூழலில் ஆதாரம் ஏதும் தேவையில்லை. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளால் விளையாடப்பட்டுவரும் இந்த கிரிக்கெட் நாட்டுப்பற்றை அளக்கும் ஒரு அளவுகோலாக இருக்கிறது. விரித்துப்பார்த்தால் கிரிக்கெட்டை நேசிக்காதவர்கலால் நாட்டை நேசிக்கமுடியாது எனும் அளவிற்கு அது மக்களை மயக்கியிருக்கிறது, தவறு மயக்கவைகப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமான எல்லா விளையாட்டுகளும் லாபம் தரும் தொழில் என்றாகிவிட்ட நிலையில் … விடாமல் ஊட்டப்பட்டு வரும் கிரிக்கெட் போதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது.

     2002ல் குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அதை கலவரமாக காட்ட முயன்று வைக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை கமிசன்களை கடந்து மீண்டும் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் மாநில குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும், விஹெச்பி தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் (மட்டுமா?) தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு வர மறுப்பதற்காக தலைமறைவுக்குற்றவாளிகள் எனவும் அறிவித்துள்ளது.      நாட்டில் நடந்த பல்வேறு திட்டமிட்ட கலவரங்களுக்கு மத்தியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது வேறுபடுத்திக்காட்டப்பட்டது. … குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது.-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தடித்த தோலையும் ஊடுருவி ஐநாவை ஒப்புக்கெனும் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இந்தியாவோ குடியரசுக்கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடக்கிறது. தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கையில் தமிழினத்தலைவர்(!) பிடில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார் இறுதிவேண்டுகோள் என்ற தலைப்பில். மாண்வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், குடியரசுதினத்தை மறுத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மக்கள். பலருக்கு புறியவில்லை அடுத்து எப்படி போராடுவதென்று? சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் புறியவில்லை, ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிப்பவர்களுக்கு பத்துப்பேரின் பட்டினிப்போராட்டம் உரைக்கப்போவதில்லை என்று. ஆயுதங்கள் அனுப்பியதும், அதை … பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.