மக்களியம். பகுதி - 3 நாம் ஏன் இயற்கை, அறிதல், அறிவு, அறிவியல், சமூகம், தத்துவம் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்? ஏனென்றால் இதன் வழியாகத் தான் நாம் வளந்து வந்தோம். நாம் வளர்ந்து வந்த, கடந்து வந்த வழியில் ஏதோ பிழை இருக்கிறது என்பதையும், ஏதோ ஒரு விதத்தில் புரிந்து வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு விதத்தில் தான் அது பிழை என புரிந்து வைத்திருக்கிறோமே அல்லாது துல்லியமான விதத்தில் அந்தப் பிழையை நாம் புரிந்து கொண்டிருக்கவில்லை. … தத்துவம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: இயற்கை
குடும்பம் 6
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11 4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான … குடும்பம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீள் தொடக்கம்
மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Interstellar: திரைப்படத்தை முன்வைத்து
இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம். இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான் … Interstellar: திரைப்படத்தை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
வேள்பாரி
வேள்பாரி - வரலாற்று நெடுங்கதை இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப் போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம் போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காக தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித் தனியே அவர்கள் … வேள்பாரி-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான் என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக
கடந்த இரண்டு நாட்களாக உலகம் அதிர்ச்சியோடு ஜப்பானைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. துறைமுகப் பேரலை எனும் பொருள்தரும் ஸுநாமி எனும் ஜப்பானியச் சொல்லையே உலகம் முழுதும் பயன்படுத்தி வந்தாலும் 2004 டிசம்பருக்கு முன்னால் இந்தியாவில் சுனாமி என்றால் யாருக்கும் தெரியாது. சுனாமியின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என அறிந்தவர்கள் கூட ஜப்பானைத் தாக்கிய இந்த சுனாமியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல் கார்களும் வீடுகளும், விமானங்களும் கூட. இதுவரை 1600 பேர் … ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக-ஐ படிப்பதைத் தொடரவும்.
பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?
கடந்த 24/12/2010 வெள்ளியன்று ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. நாட்டின் மீதும் மக்கள் மீதும் நேசம்கொண்டு உழைக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது இந்தத்தீர்ப்பு. அதேநேரம் இந்த அரசு யாருக்காக இருக்கிறது, யாரின் நலன்களுக்காக செயல்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் குற்றம் நிருப்பிக்கப்பட்டதாகக் கருதி இந்தத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதாவது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. … பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?-ஐ படிப்பதைத் தொடரவும்.