நெருப்புப் பாதை எனும் அக்னிபாத்தை அறிவிக்கும் போது, கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றச் சொன்ன அதே மனநிலையில் தான் மோடி அறிவித்திருப்பார் என எண்ணுகிறேன். எந்த எதிர்ப்பும் இன்றி அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக விளக்கு ஏற்றுவதைப் போல் அக்னிபாத்தும் நடப்பு வந்து விடும் என மோடி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த திட்டம் கடும் எதிர்ப்பை கண்டிருப்பதுடன், ரயில் எரிப்புப் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. காவல் நிலையங்களும், பாஜக அலுவலகமும், ஒன்றிய அரசு … அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: இராணுவம்
எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிக் கொண்டு, பயன்பாடு தீர்ந்த அல்லது பயன்பாடு குறைந்த பொருட்களை ஒளிப்பதிவு கருவிகளின் முன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். அதாவது, அரசு சீனாவுக்கு எதிராக இருக்கிறது என்றும், சீனாவின் பொருளாதாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். மெய்யாகவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைச் சிக்கலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவுக்கான சீனத் தூதரை அழைத்து கண்டிக்கலாம், சீனாவுக்கான இந்தியத் தூதரை … எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு? திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி … கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு?
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய … கொரோனா: ஊரடங்கின் பிறகு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்
கடந்த ஜனவரி 3ம் தேதி ஈரானின் இராணுவத் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டார். இதை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் ஒரு பயங்கரவாதி, அமைதிக்கு எதிரானவர், முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர். எனவே, என்னுடைய உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் அவரை கொன்றனர் என்று தெரிவித்தார். அதாவது, அமெரிக்காவுக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட்டார், அதனால் நாங்கள் அவரைக் கொன்றோம் இது தான் அமெரிக்கா சொல்வது. இதையே வேறொரு நாடு … ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?
ஆறாம் கட்டுரை : காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு? காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி. காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் … காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல
ஐந்தாம் கட்டுரை : நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள். காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் … நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.
புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்
கடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடனேயே இந்தச் செயலை கண்டிக்க வேண்டும் என்பது ஒரு மீப்பெரும் தார்மீகக் கடமையாக பொதுத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேச பக்தி ஆறாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் குடியுரிமையே சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதான … புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?
சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?
அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே! நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.