கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் யாருக்கானது? எனும் கேள்வி கலை, இலக்கியத்தைப் போலவே பழமை வாய்ந்தது. அதேநேரம் மிகக் குழப்பமாகவும், நீர்த்துப் போன தன்மையிலும், தெளிவாகச் சொன்னால் அந்தக் கேள்வியின் உட்கிடையை இல்லாமல் ஆக்குவதாகவே அந்தக் கேள்விக்கான பதில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. என்றால் அந்தக் கேள்விக்கான சரியான, பொருத்தமான பதில் என்ன? இன்றைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள் நிலையிலிருந்து கூட அல்ல, அவர்களே சொல்லிக் கொள்ளும் நடு நிலைமையிலிருந்து கூட அல்ல, அரசுக்கு ஆதரவான, வலதுசாரி நிலையிலிருந்து … கலையும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உடல் எனும் பொதுவுடமை சமூகம்

கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியமும் இலக்கியமும்

வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? … மார்க்சியமும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாமேதை ஏங்கல்ஸ்

28 நவம்பர் 2019. இந்த நாளிலிருந்து மாமேதை ஏங்கல்சின் 200வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. கம்யூனிசம் குறித்தும், மார்க்சிய ஆசான்கள் குறித்தும் அறிந்து கொள்ள, உலகம் புதிய உத்வேகத்துடன் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை முதலாளித்துவ அறிஞர்களாலும் கூட மறைக்க முடியவில்லை. ஆங்காங்கே மார்க்சிய படிப்பு வட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ஏங்கல்சின் படைப்புகளில் ஒன்றான ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. … மாமேதை ஏங்கல்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?

சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்

சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௫ குரானின் சவாலுக்கு பதில் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு "குரானுக்கு சவாலுக்கு பதில்" எனும் கட்டுரையில் குரானில் பயன்படுத்தப்படும் அடைப்புக்குறிகளின் இலக்கு, குரானில் இருக்கும் ஒரு முரண்பாடு, குரானின் வசனங்களுக்கு நிகராக ஒரு குறள் என்று மூன்று குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்றையுமே நண்பர் மறுத்திருக்கிறார். அவைகளைப் பார்ப்போம். குரானில் இடம்பெற்றிருக்கும் அடைப்புக்குறிகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அதற்கானவையல்ல என்பதற்கு … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫-ஐ படிப்பதைத் தொடரவும்.