நெடுமாறன் குண்டு நமுத்துப் போன மத்தாப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY

பாகிஸ்தானில் நடந்தது என்ன?

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 2 உக்ரைன் போரை அடுத்து ரஷ்யாவின் மீது ஏவப்பட்ட பொருளாதாரத்தடை எனும் நிதிய - அணு ஆயுத ஏவுகணை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க என எல்லா கண்டத்தினரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கோதுமை, எரிபொருள், உரங்கள், உலோகங்கள் உலக வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டால் அது உற்பத்தியை பாதித்து உணவுப்பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வைக் கொண்டுவரும் என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த அமெரிக்காவின் மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு … பாகிஸ்தானில் நடந்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா

எண்ணெயைப் பின்புலமாகக்கொண்டு கட்டப்பட்டதுதான் ‘பெட்ரோ டாலர் மூலதனக் கோட்டை’ என்பதும் அந்த டாலர் நிதி மூலதனம் உலக முழுக்க பாய்வதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டதுதான் ‘ஒற்றை துருவ உலக ஒழுங்கு விதி’ (Monopoly rules based world order) என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே இந்தக் கோட்டை, விரிசல்களைக் கண்டு வந்திருந்தாலும் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விரிசல்கள் பெரிதாகி, ஓட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. டாலரைத் தவிர்த்துவிட்டு ஓட்டைகளின் வழியே ஒழுகி … நிலைகுலைக்கப்படும் தெற்காசியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கையும் அதன் பொருளாதாரமும்

கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால … இலங்கையும் அதன் பொருளாதாரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?

சீன அதிபர் ஷி ஜின் பிங் கும் இந்திய பிரதமர் மோடியும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்காக தடை விதித்ததாக கருத்தப்பட்ட விளம்பர தட்டி வைக்க நீதி மன்றம் அனுமதித்தது ஒருபக்கம் இருக்கட்டும். சிறு கடைகள் அடாவடியாக துடைத்தெறியப் பட்டிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். பேரூந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதும், போக்குவரத்து மட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். மாமல்லபுரம் தங்கும் விடுதி சீன அதிகாரிகளுக்கு உவப்பில்லாததால் கிண்டிக்கு மாற்றப்பட்டதால் சென்னை நகரில் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபக்கம் … அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்

இலங்கைப் பிரச்சனை அல்லது தமீழீழப் பிரச்சனை அல்லது விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பதை அதற்காக போராடும் அமைப்புகளும், மக்களும் - இலங்கையில் இருக்கும் அமைப்புகளானாலும் தமிழகத்தில் இருக்கும் அமைப்புகளானாலும் - எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முதன்மையான விசயம். இராஜீவ் காந்திக்கு முன் இராஜீவ் காந்திக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொருத்தவரையில் இராஜீவ் கொலை நடந்திராவிட்டால் .. .. .. என்றொரு கற்பனாவாதமே அனைத்திற்குமான மையப் புள்ளி. இலங்கையில் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தியா … இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள்(!) எழுவரின் விடுதலை நீதி மன்றத் தீர்ப்பாலும், ஜெயாவின் அறிவிப்பாலும் மீண்டும் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி விடுதலைக்கு எதிராகவும், திமுக சற்றே அடக்கி வாசித்தும், அதிமுக, தமிழினவாதிகள் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் திமுகவை, கருணாநிதியை திட்டுவது தான் தமிழினவாதிகளின் ஈழ ஆதரவாளர்களின் தொல்காப்பியமாக ஆகியிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுவர் விடுதலை குறித்த குரல்கள், மெய்யாக அவர்களின் விடுதலை எனும் எல்லையை கடந்து, அதிமுக அமைச்சர்களே (அமைச்சர்கள் என்பது … எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கருத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார். இராஜபக்சேவுக்கு எதிரா … ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்

  2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் … ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

  அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.