பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்

சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட … பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கம்யூனிசத்தின் உயிர்

இன்று மாமேதை, பேராசான் மார்க்ஸின் 202 ஆவது பிறந்த நாள். உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்க விரும்பிய அந்த மாபெரும் மேதையின் கனவு இன்னும் நனவாகவில்லை. அதை நோக்கிய நகர்வில் இருக்கிறோமா என தன்னைத் தானே ஆய்வு செய்வதும், அந்த திசையில் பயணிப்பதை உறுதி செய்வதுமே நம்மையும், சமூகத்தையும் மேன்மைப் படுத்தும். கயூனிஸ்டுகள் யாரும் மார்க்ஸை கடவுளாக கருதுவதில்லை. மூலதனம் நூலை வேதமாக கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள், வேதம் போன்ற சொற்களின் பொருள், நடப்பு உலகை அப்படியே தக்க … கம்யூனிசத்தின் உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எழுதி சில காரணங்களுக்காக வெளியிடாமல் வைத்திருந்தேன். தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் குறித்த அடிப்படை புரிதலை இக் கட்டுரை வழங்கும். வியாபம் ஊழல் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எனும் உழைப்பை மிகக் கொடூரமாக சுரண்டியதோ, அதே போலவே, தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளும் கொடூரமான சுரண்டலே. ஆனால், மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து இதற்கு போதிய … விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!

  ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!

  பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு. பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில்  இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு … அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?

  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது. அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் … நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.