கொலைகளின் நீர்த்த வடிவமே கைது. சமூக ஊடக சலம்பல்களால் கடவுள் மறுப்பு பரப்புரையை தடுத்து விட முடியுமா? சாதிக்சமது கைதை முன்வைத்து கைது ஆத்திகர்களின் வெற்றியா? நாத்திகர்களின் தோல்வியா?அரசின் தன்மை என்ன? அரசு ஏன் கைது செய்கிறது? எது விமர்சனம்? எது அவதூறு? மனம் புண்படுவது ஏன்? உள்ளிட்ட பல சேதிகளை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=Ry88We4CoUU
குறிச்சொல்: இஸ்லாம்
கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே
அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள். “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீண்டும் ஒரு விவாதம்
கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கோவையும் சில குரங்குகளும்
தீபாவளிக்கு முதல் நாள் கோவையில் ஒரு வண்டியின் எரிவாயு உருளை வெடித்தது. அதில் அந்த வண்டியில் இருந்த முபீன் என்பவர் இறந்து போனார். மட்டுமல்லாது அந்த வெடிப்பில் ஆணிகளும், கோலிக் குண்டுகளும் சிதறின. வெடித்த இடம் ஒரு கோவிலுக்கு முன்னால். இவை எல்லாம் சேர்ந்து ஒருவித ஐயத்தை ஏற்படுத்தவே காவல்துறை விரைந்து செயல்பட்டது. இறந்தது யார் என அடையாளம் காணப்பட்டது. இறந்தவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் தொடர்புடையவர்கள் … கோவையும் சில குரங்குகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வரம்பு மீறும் நீதிமன்றங்கள்
நீதி மன்றத்தின் அல்லது நீதிபதியின் ஆளுமை வரம்பு என்ன? எந்த அடிப்படையில் தீர்ப்பு கூறப்படுகிறது? கூறப்படும் தீர்ப்பிற்கு வழிகாட்டலாக இருக்கக் கூடியது என்ன? இதுபோன்ற கேள்விகளெல்லாம் நீதிபதிகளுக்கு எழுமா? எழாதா? நீதிபதிகள் தங்களைத் தாங்களே கடவுள்களாக கருதிக் கொள்ள முடியுமா? அவ்வாறாக கருதிக் கொள்ளும் நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டங்களாக ஆகுமா? நீதிபதிகளின் தீப்புகள் சட்டங்களுக்கான விளக்கங்களா? அல்லது சட்டங்களை மேலாதிக்கம் செய்யும் அளவுக்கு ஆற்றல் கொண்டவையா? அண்மையில் நீதி மன்றங்களின் தீர்ப்புகள் தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன. … வரம்பு மீறும் நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எது பயங்கரவாத இயக்கம்?
நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்
இஸ்லாத்தில் சாதியப் படிநிலை உண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினால், இரண்டு விதமான பதில்கள் நமக்கு கிடைக்கும். வேத உபநிடதங்களில் இல்லை இஸ்லாமியர்களிடையே இருக்கிறது என்று கொஞ்சம் நேர்மையான பதிலும், இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை எனவே, இஸ்லாத்தில் சாதி இல்லை எனும் மதவாதப் பதிலும் கிடைக்கும். இந்த பதில்கள் கூறுவது போலல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே சாதிய மனோநிலை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே வடிவத்தில் இஸ்லாமிய … இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உதைப்பூர் கொலையில் பாஜக
நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சு பெருங் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த நேரத்தில், “பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?” என்றொரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் உள்ள ஒரு பத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன். சிஏஏ சட்ட வரைவு கொண்டு வந்த போது, இஸ்லாமிய மண விலக்கு சட்ட திருத்தத்தின் போது, அடித்துக் கொல்வது தொடர்கதை ஆனபோது, பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு சட்ட அங்கீகரம் பெற்ற போது, முகத்திரை சிக்கலின் போது, கலவரம் செய்த போது, கலவரத்தை எதிர்த்தவர்கள் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு தரை … உதைப்பூர் கொலையில் பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.
இடிப்பை கொண்டாடுகிறதா இந்தியா
காயம் மிகவும் முற்றி, சீழ் பிடித்து அழுகத் தொடங்கி விட்டதற்கான அறிகுறி இது. காவல் துறை ஒரு போதும் மக்களின் காவலர்களாய், நண்பர்களாய் இருந்ததே இல்லை. அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டாலும் கூட. ஒவ்வொரு ‘என்கவுண்டர்’களின் பின்னாலும் ஒரு பகைவெறி இருக்கிறது. கொள்ளைகள், கலவரக் கொலைகள் எதுவும் காவல்துறைக்கு தெரியாமல் நடந்ததில்லை. ‘அடித்து’ விசாரிப்பது தொடங்கி கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது வரை அத்தனையும் சட்ட விரோத, மனித விரோத செயல்களே. இத்தனையையும் எவ்வித … இடிப்பை கொண்டாடுகிறதா இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.
கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்
ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.