இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன? யார் அந்த சமூக விரோதிகள்?

  நேற்று (18.02.2019) ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்திரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, உச்ச நீதி மன்றத்துக்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்றும் கூறியிருக்கிறது. இது போராடிய மக்களுக்கு தற்காலிக வெற்றி தான் இன்னும் வழக்கு நீள்கிறது. சிறப்புச் சட்டம் இயற்றுவதே தீர்வு என்பது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மக்களின் விருப்பம். நிற்க. தீர்ப்பு வழங்கப்பட்ட இதே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. … ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன? யார் அந்த சமூக விரோதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?

  உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி நீதித்துறை சுதந்திரம் – ஜனநாயகத்திற்கு பேராபத்து நேர்ந்திருப்பதாகவும் மக்கள் தான் இந்த பேரபாயத்திலிருந்து நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   நாட்டின் உயரிய நிலையில் இருக்கும் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது, மக்களிடத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நாட்டின் நிர்வாகம் தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்து … நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தமிழ் மக்களே, தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? “அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி … தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.

எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?

அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பெழுதிய நீதிபதி(!)கள், குற்றம் நீரூபிக்கபடவில்லை என்றாலும் இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை விதிக்கிறோம் என்றார்கள். சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்களை நெருங்கியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாதிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பிணை கிடைத்துவிடும் என்ற நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றது சிறைத்துறை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெளிப்படும் கிடக்கை என்னவென்றால், அப்சல் குரு வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுப்பது … எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!

நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்: டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. (ஊழல் விவகாரங்களின் வரிசையில் இன்னும் ஒரு விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது). காலை 11.30 மணிக்கு, 5 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் IED ( (உருவாக்கப்பட்ட வெடிக் கருவி) பொருத்தப்பட்ட வெள்ளை அம்பாசடர் காரை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக ஓட்டி வந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட போது, காரிலிருந்து வெளியில் குதித்து சுட ஆரம்பித்தார்கள். அதைத் … அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருணையினால் அல்ல!

முதல் பதிவு: வினவு

நீதிமன்றத்தின் கருப்புப்பண கவலை, செயலேதுமற்ற சாவூட்டுக் கவலை

சில நாட்களாக கருப்புப்பண விவகாரம் மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. "நாட்டின் பொருளாதரமே கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்த அரசு ஏன் மறுக்கிறது?" என்பதுபோன்ற கேள்விகளை அள்ளிவீசி நீதிமன்றம் தன் வீரியத்தை(!) நிரூபித்திருக்கிறது.   கடந்த பாரளுமன்ற தேர்தல் நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் 70 லட்சம் கோடி குறித்த தகவல் வெளியாகி, அரசியல்வியாதிகள் அதைக் கொண்டு சவடால்கள் அடித்து பொழுது போக்கினார்கள். உச்சகட்டமாக, நாங்கள் ஆட்சியமைத்தால் நூறு நாட்களில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் … நீதிமன்றத்தின் கருப்புப்பண கவலை, செயலேதுமற்ற சாவூட்டுக் கவலை-ஐ படிப்பதைத் தொடரவும்.