குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் விவாதமாகவும், நாடெங்கும் தணியாத போராட்டங்களாகவும் வடிவெடுத்திருக்கும் வேளை. வேறெந்த பிரச்சனைகளையும் விட, பொருளாதார பின்னடைவைக் கூட பின்னுக்குத் தள்ளி குடியிரிமை போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. இப் போராட்டங்களை தடுக்க வழக்கம் போல காவல்துறை மூலம் வன்முறையை கையிலெடுத்திருக்கிறது. அனைத்தையும் மீறித் தான் போராட்டங்கள் தொடர்கின்றன. ஏனென்றால், பிற எல்லாவற்றையும் விட குடியிரிமை சட்டத் திருத்தம் மக்களைப் பாதிக்கும் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. அந்த போராட்ட நெருப்பை அணையாமல் பாதுகாப்பதும், தொடர்ந்து முன்னெடுத்துச் … பாஜக மெய்யாகவே வென்றதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உச்ச நீதிமன்றம்
உச்சா மன்றத்தை தடை செய்வோம்
நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக தமிழகம் போராடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடியதைப் போல் மெரினாவிலோ அல்லது வேறெங்கேனுமோ மாணவர்கள் இளைஞர்கள் கூடிவிடக் கூடாதே என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குக்கிராமங்களின் ஆளே இல்லாத பேருந்து நிலையங்களில் கூட காக்கிக் காலிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் என்ற பெயரிலிருக்கும் உச்சுக்குடுமி மன்றமான உச்சா மன்றம் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்று … உச்சா மன்றத்தை தடை செய்வோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய தமிழ் தி இந்து நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது. வழக்கு தொடுப்பதன் விபரீத விளைவு தெரிந்துதான் இந்த இளைஞர்கள் செய்கிறார்களா தெரியவில்லை. வழக்கு தொடுப்பது என்பது நெடுவாசல் மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் … நெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது-ஐ படிப்பதைத் தொடரவும்.
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே அவர்களின் கல்வி!!
சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது. “சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக … இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே அவர்களின் கல்வி!!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!
சமச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் … சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!
தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும். அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி … சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.