கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உடல்
சிவப்புச் சந்தை
இந்நூல், உலகெங்கும் பரவியுள்ள கொடூரமிக்க, பாதாள உலகத்தின் வழியே அதிர்ச்சியூட்டும் சுற்றுலாவுக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு விரிவான விவரணை. அங்கு சிவப்புச் சந்தையில் உடலுறுப்புகள், எலும்புகள், உயிரோடிருக்கும் மனிதர்கள் முதலியவை வாங்கி விற்கப்படுகின்றன. மனித உடல்களையும் உடல் பகுதிகளையும் கொண்டு நடக்கும், அதிக லாபம் ஈட்டித்தரும் தீவிரமிக்க, இரகசியமான வணிகம். இதைத் தொடர்ந்து செல்வதில் ஐந்து ஆண்டு காலம் களப்பணி செய்திருக்கிறார் புலனாய்வு பத்திரிக்கையாளரான ஸ்காட் கார்னி அது ‘சிவப்புச் சந்தை’ என்று அறியப்படும் பரந்தகன்ற … சிவப்புச் சந்தை-ஐ படிப்பதைத் தொடரவும்.
சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?
‘டிராஃபிக்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் மறுதயாரிப்பு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் வெளிவந்து பரவலான கவனிப்பையும், இணைய உலகில் சமூக அக்கரையுள்ள படம் எனும் அடையையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு இணையப் பரப்பில் செய்யப்படும் விமர்சனங்களைப் படித்தபோது மறைந்த நாகேஷ் பேசிய ஒரு வசனம் தான் நினைவுக்கு வந்தது. “உடம்பை விட்டு விட்டு உயிரை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டாயே, எப்படி?” என்று ஏதோ ஒரு படத்தில் பேசியிருப்பார். அதேபோல் … சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.