இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் … இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்

அன்பார்ந்த பொது மக்களே, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கன்யாகுமரி மாவட்டம் இடிந்த கரையில் நடத்திவரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர் விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அணு … பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?

கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது.  அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்  உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர். 2006 தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும், மேற்புறம் பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால், தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது … கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்

அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் … அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்

ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக‌ அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி … ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக

பத்தாவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது வழக்குறைஞர்களின் பட்டினிப் போராட்டம். நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழையும் அங்கீகரிக்கவேண்டும் எனும் கோரிக்கையுடன் மதுரையில் தொடங்கிய இந்த பட்டினிப் போர் சென்னை, புதுவை, கோவை, புதுக்கோட்டை என விரிவடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகளும், மக்களும் ஆதரவளித்து வருகிறார்கள். தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்தில் தமிழ் மொழியையும் வழக்கு மொழியாக செயல்படுத்துங்கள் என போராடும் நிலை என்பது முரண்பாடான ஒன்றாய் தோன்றலாம், ஆனால் இந்த முரண்பாடு மொழியோடு மட்டும் … வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக-ஐ படிப்பதைத் தொடரவும்.