பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்

இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.   "உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு … ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!

8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான். 8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை … மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம்.   விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய … பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு

நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு … மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!   துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரையில் கார்னெட், இல்மனேட் ருடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலைமதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனால் துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான கடற்கரை முழுவதும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கனிமவளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை சம்மந்தமான விதிகள் உட்பட எல்லா விதிகளையும் காலில் போட்டு … தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் … பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்

  சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது.   காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து

  அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ.   கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு … மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!  நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!   அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,   குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் … கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.