சொல்லுளி டிச 22 இதழ்

டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி சொன்னால் உண்மை இருக்குமா?

ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் … மோடி சொன்னால் உண்மை இருக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: WHO வை நம்பலாமா?

டெட்ரோஸ் அதனோம் உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 14 வரை இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு ஆறிவிக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 21 நாட்களை கொண்டாட்டமாக செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவது. என்ன சாப்பிட்டோம் என்பது தொடங்கி என்ன படம் பார்த்தோம் என்பது வரை பதிவிட்டு, பதிவிடத் தூண்டி ஆறாத … கொரோனா: WHO வை நம்பலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருவெளியின் தூசு

பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்

  உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான்  என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும்  பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4

  கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான  நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள். நண்பர் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…

நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள். லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்தனையிலும் மக்களால் … புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழலில் 19வது இடம்; வெட்கப்படுவது மட்டும் போதாது.

மழைக்காலம் வெயில் காலம் என பருவகாலம் மாறுவதைபோல மக்கள் பேசும் விசயங்களும் ஊடகங்கள் அடியெடுத்துக்கொடுப்பதைக்கொண்டு அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். ஒருமுறை வங்கிகள் நிறுவனங்கள் திவால் பேசுபொருளாயிருக்கும், மறுமுறை போராட்டங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாய் விளம்பப்படும், மற்றொரு முறை அரசியல்வாதிகளின் வீரதீர விசாரங்கள் பிரிதொரு முறை வழக்கு விவகாரங்கள், இப்போதோ ஊழல். அண்மையில் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேசனல் என்ற அமைப்பு அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகளின் அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பத்தொன்பதாவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. ஊழல் குற்றம் … ஊழலில் 19வது இடம்; வெட்கப்படுவது மட்டும் போதாது.-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?

கடந்த சனிக்கிழமை இரவு ஒருமணிநேரம் விளக்கணைக்குமாறு அதாவது மின்சார பயன்பாட்டை நிறுத்துமாறு அறிவுத்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டது. இது சுய உதவிகுழுக்கள் போன்றவற்றால் பரப்புரை செய்யப்பட்டு மக்களும் தம்மால் இயன்றவரை புவிசூடேற்றத்தை தடுத்துவிட்டதாகவும், வருங்கால சந்ததிகளுக்கு உதவிவிட்டதாகவும் எண்ணி பெருமிதம் கொண்டன‌ர். 2007ல் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்த விளக்கணைப்பு வைபவம் இந்த மூன்று ஆண்டுகளில் உலகின் எல்லா நாடுகளையும் மக்களையும் ஈர்த்துள்ளது. தெருவில் பிச்சைகாரனுக்கு பத்துபைசா எறிந்துவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டதாய் அகமகிழ்வதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு. புவிசூடேற்றம் அல்லது … ஒருமணிநேரம் விளக்கணைப்பது புவி சூடேற்றத்தை தடுக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.