கடந்த ஆண்டின் மே நாளில் வெளியான கட்டுரையின் மீள்பதிவே இது. சூழலும் தேவையும் மாறிவிடவில்லை என்பதால் .. கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் … கொரோனாவில் மே நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உழைக்கும் மக்கள்
பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?
நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்
வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்
கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடங்கின் பின் மக்களின் பாடு
நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? … ஊரடங்கின் பின் மக்களின் பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: அரசியல் செய்யலாமா?
“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி … கொரோனா: அரசியல் செய்யலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு? திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி … கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு?
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய … கொரோனா: ஊரடங்கின் பிறகு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கிராம அளவில் நடக்கும் ஊழல்
அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலை எண்பத்தோறு குழந்தைகளுக்கு கொடுத்ததாக ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் கண்டோம். தோராயமாக ஒரு குழந்தைக்கு 200 மில்லி கொடுப்பதாக இருந்தால், ஒரு லிட்டர் பாலோடு 15 லிட்டர் தண்னீரை கலந்திருக்கிறார்கள். இவ்வளவு தண்ணீரை கலந்தால் அது பாலாக இருக்குமா? என்பது ஒரு பக்கம். அந்த 15 லிட்டர் பாலின் விலை யாரோ சிலரின் பைகளுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஒரு நாளில், ஒரு வேளையில் … கிராம அளவில் நடக்கும் ஊழல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?
அவன் மானுடத்தின் வக்கீல் அன்று அவன் பெயரை எழுதக் கூட அனுமதிக்காமல் மொழி முடமாக்கப்பட்டது இன்றோ சூரியன் கூட அவன் பெயரை உச்சரிக்காமல் உதிக்க முடியவில்லை அவன் இருந்த போதோ தூசிக்கப்பட்டான் இன்று அவன் புதைகுழியின் புல்லும் கூட பூஜிக்கப்படுகிறது. அழகைப் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன் என்னை அறிவால் பிரமிக்கவைத்தவன் அவன் தான் அவன் கண்களில்… உலகின் இருட்டையெல்லாம் விரட்டியடிக்கும் வெளிச்சம் அவன் தான் மனிதகுலத்தின் இறந்த காலத்தையெல்லாம் ஜெயித்து முடித்த சிந்தனையாளன் கடவுளின் சிறைச்சாலையிலிருந்து … மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.