இந்தியா ஒற்றை தேசியமல்ல என்று சமூக அரசியல் ஆர்வமுள்ள பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனிய அரசியல் இந்தியாவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. ஆக, இந்தியாவின் அரசியல் முரண்பாடு என்பது இந்தியா ஒற்றை தேசியமா? பல்தேசியமா? என்று தான் கூர்மைப்படுகிறது. இந்தியா பல்தேசிய நாடு தான் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது தான் இந்தியா எனும் நாடு இருக்கும். இந்த புரிதலை வெகு மக்களிடம் … இந்திய தேசியத்தின் தோற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உழைப்பு
மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது
உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?
உயர் மதிப்பு கொண்ட ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்தவைகளாக அறிவித்து நாற்பது நாட்களைக் கடந்து விட்டது. கருப்புப் பணம் என்றார்கள், கள்ளப்பணம் என்றார்கள், ஊழலை ஒழிக்க என்றார்கள் சல்லடையில் அள்ளிய தண்ணீர் போல் எதுவும் நிற்கவில்லை மக்களிடம். கடைசியில் நிதியமைச்சரின் வாயிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்தது, கேஷ்லெஸ் எகானமி தான் எங்கள் நோக்கம் என்று. அதாவது கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை ஒழிப்பதெல்லாம் எங்கள் நோக்கமல்ல நாட்டில் ரொக்கமற்ற பொருளாதாரத்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்கிறார்கள். கடந்த நாற்பது … ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?
நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. ! செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாசிச மோடி
பிரசன்னா, ராஜ் ரம்யா ஆகியோரின் கேள்விகளுக்கும், ஃபெரோஸ் அவர்களின் பின்னூட்டத்திற்குமான பதில்கள் தான் இந்த இடுகை. தோழர் செங்கொடி, ஆதிகால மனித சமூகம் பொதுவுடமை அமைப்பைக் கொண்டிருந்தது என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். உங்களுடைய எழுத்துகளிலும் அக்கருத்து உள்ளது. எனவே, கார்ல் மார்க்ஸ் தன் எழுத்துகளின் மூலம் மீட்டுருவாக்கம் செய்த பொதுவுடமை கருத்தாக்கமானது, நமது ஆதி மனித சமூகம் கொண்டிருந்த ஒன்றுதானா? அல்லது அதன் அடிப்படையிலமைந்த, ஆனால் பல மாறுதல்களைப் பெற்ற ஒரு கருத்தாக்கமா? கார்ஸ் மார்க்ஸின் … பாசிச மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?
தோழர் செங்கொடி, ஆண்டான் - அடிமை சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? அதைப்பற்றி விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரு பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து சமூக மாற்றம் என்பது அடிப்படையில் உற்பத்தி முறை மாறியதன் விளைவாக ஏற்படும் உற்பத்தி சக்திகளின் உறவு மாற்றத்தைக் குறிக்கும். ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்றால் அதன் பொருள் அடிமை உற்பத்திமுறையில் இருந்த மக்களின் உறவுநிலைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்த மக்களின் உறவு நிலைக்கும் இடையிலான … அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! இந்த ஆண்டின் மே நாள் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன்வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால் விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது. ஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உருப்புகள் அனைத்தும், அவற்றுக்கு உரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, … ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெண்கள் என்றால் .. .. ..
மூதூர் மொகமட் ராபி செங்கொடி தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த பெயர் தான். பலமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய கேள்விகளால் இந்தத் தளத்தின் ஈர்ப்புக் கவர்ச்சியை கூட்டியவர். அந்தக் கேள்விகளும், சில பின்னூட்டங்களும் அவரின் அகத் தேடல்களை, அற உணர்ச்சிகளை புறம் கொண்டு வந்தவைகள். அண்மையில் ஆணாதிக்கம் குறித்து ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். வெகு எதார்த்தமான கேள்விகள், எளிமையான விளக்கங்கள். அந்தக் கட்டுரையை உங்களுக்கும் அறியத்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே. இவருடைய வேறு ஆக்கங்களை வாசிக்க … பெண்கள் என்றால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
மே நாளில் சூளுரை ஏற்போம்
அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை. நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது. ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை … மே நாளில் சூளுரை ஏற்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே! "பெண்கள் இந்நாட்டின் கண்கள்" என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா? அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் … மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.