செய்தி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .. .. .. நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு … இனவெறியூட்டும் ஊடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஊடகங்கள்
பிரபலமான குசு
ஒரு பிரபல மனிதருக்குஎப்போதாவது தான்குசு விடவேண்டும் போலிருக்கிறதுஅப்போது அவர்எல்லோருக்கும் கேட்கும்படியாகஒரு குசு விடுகிறார்அது நகரத்திற்கு மேலாக‘டமாரெ’ன்று வெடிக்கிறதுபோன மாதம்இன்னொரு பிரபலமான மனிதர் விட்ட குசுவை விட’இந்தக் குசு பெரிதாக இருந்தது. நகரவாசிகள் அனைவரும்அந்த சத்தைக் கேட்கிறார்கள்அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்அந்த குசு வெடித்த இடத்தில்ஒரே புகை மண்டலமாக இருக்கிறதுசத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்சில நொடிகளில் வந்துவிட்டனஒரு குசுவை படம் பிடிப்பதில்அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது அவர் ஏன் இப்போதுகுசு விடுகிறார் என்று கேட்கப்படுகிறதுஇதற்கு முன் … பிரபலமான குசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாபர் பள்ளியில் ராமர் கோவில்
மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் தமிழக தொலைக்காட்சிகள்! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நல்ல காலம் புதிய தலைமுறை,நியூஸ் 18, நியூஸ் 7 தொலைக்காட்சிகள் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியாவே கலவரங்களால் சூழப்பட்ட போதும் தமிழகம் அமைதியாக இருக்க அப்போதைய ஊடகச் சூழலும் ஒரு காரணம்.ஆனால், மசூதி இருந்த இடத்தில் இன்று ராமர் கோவில் கட்டுகிறார்கள்.அதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்,தலித் மக்களின் ரத்தம் தோய்ந்துள்ளது.ஒரு பக்தி நிகழ்ச்சியை கவர் செய்வது என்பது … பாபர் பள்ளியில் ராமர் கோவில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
போர் தொடங்கி விட்டது
இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது. மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது … போர் தொடங்கி விட்டது-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊடகங்களிலும் உரிமைப் போர்
தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்
கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?
உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி நீதித்துறை சுதந்திரம் – ஜனநாயகத்திற்கு பேராபத்து நேர்ந்திருப்பதாகவும் மக்கள் தான் இந்த பேரபாயத்திலிருந்து நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் உயரிய நிலையில் இருக்கும் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது, மக்களிடத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நாட்டின் நிர்வாகம் தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்து … நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை
கன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் … பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
தலாய் லாமாவின் முகமூடியும், ஒரு பதிவரின் அவதூறும்
அண்மையில் நண்பர் ஹைதர் அலி “மாவோ:சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம்” என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். அதன் சாரம் மாவோவின் செஞ்சீனம் திபெத்தை அக்கிரமித்து கொடூரங்கள் செய்தது என்பது. அவரின் நோக்கமோ, இஸ்லாத்தின் மீது எழுதப்படும் விமர்சனங்களுக்கு எதிர்வினையாக கம்யூனிசத்தை களங்கப்படுத்துவது. இவர் தன்னுடைய கட்டுரையின் தொடக்கத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், “ஆனால் அவர்கள் பின்பற்றும் வழிமுறை? நேர்மையற்றது,மிகத்தவறானது” எங்கள் கொள்கைகளை வெளிப்படுத்தும் விதம் அவருக்கு ஏற்புடையதாக இல்லாதிருந்தால் அதை விமர்சனம் செய்யலாம். மாறாக, இஸ்லாத்தை விமர்சிப்பதனாலேயே அது … தலாய் லாமாவின் முகமூடியும், ஒரு பதிவரின் அவதூறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்
அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் … அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.