கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சிரீமதி மரணம் தொடர்பான போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. இதனால் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, தீர்வு காணப்பட வேண்டிய சிரீமதியின் மரணம், அதற்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு, போராட்டத்தில் சிலரால் செய்யப்பட்ட வன்முறை பெரிய அளவில் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. எது சரி எது தவறு எனும் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு நீதித் துறையும், காவல் துறையும் வரைமுறையற்ற வன்முறையை … கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஊடகம்
தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?
இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்.. சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க.. என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் … தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், … உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?
பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா? என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் … செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இவர்களை எதால் அடிப்பது?
இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது … இவர்களை எதால் அடிப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கேள்விக்கென்ன பதில்?
செய்தி: ஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார். “ஒப்புக் கொள்ளப்பட்ட அணிவகுப்பு வழியிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி செல்ல விவசாயிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் தூண்டியதாக டெல்லி போலீஸார் கூறுவது தவறு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மற்றும் அணிவகுப்புகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல விவசாய … கேள்விக்கென்ன பதில்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எல்லை தாண்டும் பொய்கள்
பாஜக எனும் பாசிசக் கூட்டத்துக்கும் பொய்களுக்கும் இடையிலான நெருக்கம் அவ்வளவு எளிதில் இற்று விடக் கூடியது அல்ல. இந்தியாவை மத அடிப்படையில் இரண்டாக பிரிக்க ஆவன செய்து விட்டு, ஜின்னா நாட்டை துண்டாடுகிறார் என பரப்பியதில் தொடங்கிய பொய்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். என்றாலும் தற்போது அது புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்பது கவனத்துக்கு உரியது. இந்தியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த கமுக்க(இரகசிய)ச் செய்தி … எல்லை தாண்டும் பொய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகநூலா? பாஜகவின் பின்வாயா?
செய்தி: இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குத் தனது வெறுப்பு பேச்சுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட செய்திதான், இன்று இந்திய அரசியலை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவர்களின் மீறல்களைத் தண்டிப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை கண்டுகொள்ள வேண்டாம் என ஃபேஸ்புக்கின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. ஃபேஸ்புக் பாஜகவுக்கு … முகநூலா? பாஜகவின் பின்வாயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?
நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இதுதான் நடவடிக்கைங்களா ஆபீசர்!
செய்தி: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குத் தேவையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வகையில் அரசாணை எண்.240 சுகாதாரத் துறை ஜூன் 5 அன்று அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் (Be well) மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது. … இதுதான் நடவடிக்கைங்களா ஆபீசர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.