கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் யாருக்கானது? எனும் கேள்வி கலை, இலக்கியத்தைப் போலவே பழமை வாய்ந்தது. அதேநேரம் மிகக் குழப்பமாகவும், நீர்த்துப் போன தன்மையிலும், தெளிவாகச் சொன்னால் அந்தக் கேள்வியின் உட்கிடையை இல்லாமல் ஆக்குவதாகவே அந்தக் கேள்விக்கான பதில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. என்றால் அந்தக் கேள்விக்கான சரியான, பொருத்தமான பதில் என்ன? இன்றைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள் நிலையிலிருந்து கூட அல்ல, அவர்களே சொல்லிக் கொள்ளும் நடு நிலைமையிலிருந்து கூட அல்ல, அரசுக்கு ஆதரவான, வலதுசாரி நிலையிலிருந்து … கலையும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

போர் தொடங்கி விட்டது

இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது. மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது … போர் தொடங்கி விட்டது-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊடகங்களிலும் உரிமைப் போர்

தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1

அண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா? என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு … மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.