ஊரடங்கு எனும் நிதித் தொற்று

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு எனும் கரிய இருட்டு எளிய மக்களின் வாழ்வை கவ்விக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று தொற்றிவிடாதிருக்க ஊரடங்கு தான் ஒரே வழி என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு என்பது, இரண்டு வாரம் ஊரடங்கு இரண்டு நாள் தளர்வு மீண்டும் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது என்ன காரணத்துக்காக ஊரடங்கை நடைமுறைப் படுத்துகிறார்களோ அதற்கு நேர் எதிரான விதத்தில் … ஊரடங்கு எனும் நிதித் தொற்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி சொன்னால் உண்மை இருக்குமா?

ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் … மோடி சொன்னால் உண்மை இருக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இ பாஸா? இ ஊழலா?

செய்தி: இ-பாஸை ரத்துசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பணம் அளிப்பவர்களுக்கும் தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால், இ-பாஸ் நடைமுறையை … இ பாஸா? இ ஊழலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கு தொடரும், ரேசன் தொடராது

செய்தி: ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்திற்கு அரிசியோடு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி … ஊரடங்கு தொடரும், ரேசன் தொடராது-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறுமை சூழுது… ஜாக்கிரதை!

மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன். சையது - ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள். ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. … வறுமை சூழுது… ஜாக்கிரதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் கீழ் தூங்குகிறார்கள். அவற்றில் ஒருவன் வண்ணமயமான கோடுகளுடன் உள்ள கருப்பு விரிப்பில் படுத்திருக்கிறான்; மற்றொறுவன் பைகள் இணைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு அருகில் தூக்கிப் போடப்பட்ட வெள்ளை சாக்கில் படுத்திருக்கிறான். இதேபோன்ற ஏற்பாடுகளில் மேலும் மூன்று ஆண்கள் சிறிது தூரம் தொலைவில் தூங்குகிறார்கள். அவர்களின் உடைகளும், தலையும் அழுக்கடைந்துள்ளது, பயணத்தின் அழுக்கு மற்றும் வியர்வை அவர்களின் … நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரானா காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு

எல்லா ஊடகங்களின் சின்னங்களிலும் தாம் நடுநிலையான செய்திகளை வழங்குவதான ஒரு குறியீடு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எல்லாக் காலங்களிலும் செய்தி ஊடகங்கள் பக்கச் சார்போடு தான் இருந்தன, இருக்கின்றன, இருக்கும். ஆனால் அந்த பக்கச் சார்பு எந்தப் பக்கம் என்பது தான் பிரச்சனை. ஒருபோதும் அவை மக்கள் பக்கம் நின்றதே இல்லை. அதேநேரம் எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையோடு செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பதாக நம்பவைக்க முயல்கின்றன. இதன் மறுபக்கமாக ஊடகங்கள் எந்தப் பக்கச் சார்போடு இருக்கின்றனவோ, அந்தப் … கொரானா காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு

கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் பின் மக்களின் பாடு

நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? … ஊரடங்கின் பின் மக்களின் பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.