இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி

சில நாட்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடந்தது. இதில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கு கொண்டன. மொத்த அலைக்கற்றை பயன்பாட்டு உரிமையில் 71 விழுக்காடு கலந்து கொண்ட நான்கு நிறுவனங்களும் பெற்றுக் கொண்டன. மீதமிருக்கும் அலவை எதிர்வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்குள் ஏலம் கோரி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் 4.3 லட்சம் கோடிகள் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்திருப்பதோ 1.5 லட்சம் கோடிகள் தான். கடந்த … இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?

இந்து எனும் சொல் பார்ப்பனிய அரசியலைக் குறிக்கும் சொல் என்று இடதுசாரிகள் தொடங்கி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி ஏமாற்றுவோர்கள் எல்லா மதங்களிலும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. இந்து என நம்பப்படுகின்ற பார்ப்பனிய மதத்துக்கும் பிற மதங்களுக்கும் உள்ள வித்தியாசமே இது தான். பிறவற்றில் மதத்தை சொல்லி கடவுளைச் … கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?

இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்.. சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க.. என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் … தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழலுக்காக உருவாக்கப்பட்டதா NAMO App?

கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடை பெறுவதில் பிற எந்தக் கட்சிகளும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் பெருமதிப்பில் நன்கொடைகளை திரட்டி இருக்கிறது பாஜக. அதற்கு பின்னணியில் இருப்பது அதிகாரமும், அந்த அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதும் ஆகும். ஊழல் என்றால் அது கமுக்கமாக யாருக்கும் தெரியாமல் செய்வது எனும் இலக்கணம் மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. மோடி பதவி ஏற்றத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. எழுப்பப்படும் கேள்வி - அது நாடாளு மன்றம் என்றாலும் மக்கள் மன்றம் … ஊழலுக்காக உருவாக்கப்பட்டதா NAMO App?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக … நாறும் எம்.ஜி.ஆர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இ பாஸா? இ ஊழலா?

செய்தி: இ-பாஸை ரத்துசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பணம் அளிப்பவர்களுக்கும் தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால், இ-பாஸ் நடைமுறையை … இ பாஸா? இ ஊழலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்

கடந்த இரண்டு நாட்களாக, ரேபிட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இவை குறித்து பெரிதாக எந்தவிதமான செய்திகளோ விவாதங்களோ நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு நாளிதழ்கள் அனைத்தும் ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. மாறாக தலையங்கமாகவோ, கட்டுரையாகவோ, பொதுச் செய்தியாகவோ இதை வெளியிடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், எதிர்கட்ட்சிகள் தான் இதில் முறைகேடுகள் இருப்பதாக … கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்

முன்குறிப்பு1: தமிழ் நாட்டின் வியாபம் ஊழல் என்று கூறத்தக்கதாக டி.என்.பி,எஸ்,சி முறைகேடுகள் இருக்கிறது. வெளிவந்திருப்பது ஒரு நுனி தான் என்பதில் உய்த்துணரும் திறன் கொண்ட யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. முறையாக விசாரிக்கப்பட்டால் கல்வி அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதையும், முதல்வர், ஆளுனர் உள்ளிட்ட மிகு அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும், 2000 கோடிக்கு மேல் முறைகேடு என கணக்கிடப்பட்டிருப்பதையும், 400 க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகி … டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முட்டை அரசாங்கம்

அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு அநீதியாக நீக்கப்பட்டது. அதற்கு இசைவாக பபாசி தலைவர்களை தாக்க முயன்றதாக காரணம் கூறி வழக்கு தொடரப்பட்டது. அன்பழகனும் கைது செய்யப்பட்டார். இந்த அத்துமீறலை பலரும் தனித்தனியே கண்டித்திருந்தாலும், புத்தகக் கண்காட்சி வழக்கம் போல இயங்கியது. பின் அது ஒரு செய்தியாக கடந்து, மறந்தும் போனது. ஆனால், மெய்யாகவே அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கும், புத்தகக் கண்காட்சியிலிருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு நீக்கப்பட்டதற்கும், அவர் பபாசி … முட்டை அரசாங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிராம அளவில் நடக்கும் ஊழல்

அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலை எண்பத்தோறு குழந்தைகளுக்கு கொடுத்ததாக ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் கண்டோம். தோராயமாக ஒரு குழந்தைக்கு 200 மில்லி கொடுப்பதாக இருந்தால், ஒரு லிட்டர் பாலோடு 15 லிட்டர் தண்னீரை கலந்திருக்கிறார்கள். இவ்வளவு தண்ணீரை கலந்தால் அது பாலாக இருக்குமா? என்பது ஒரு பக்கம். அந்த 15 லிட்டர் பாலின் விலை யாரோ சிலரின் பைகளுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான்  உண்மை. ஒரு நாளில், ஒரு வேளையில் … கிராம அளவில் நடக்கும் ஊழல்-ஐ படிப்பதைத் தொடரவும்.