காவிரி மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது. எதை எப்போது கிளப்பிவிட்டு திசை திருப்பி தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் முனைவர் பட்டம் தந்துவிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு குருதி அழுத்தத்தை எகிரவைத்த கணக்குகள் பேரங்கள் முடிந்து ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தமிழகத்தில் வரிசையாக கட்சிமாறிக்கொண்டிருந்த பலவீனத்திலிருந்து மீண்டு அதிமுக கூட்டங்களின் மூலம் பலம் காட்டிக்கொண்டிருந்ததை மறைத்து போக்குக்காட்ட கருணாநிதிக்கு மக்களை பேசவைக்க ஒரு பிரச்சனை தேவைப்பட்டது. அவ்வளவு தான் இவர் வழக்கம்போல் கடிதம் … காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: எடியூரப்பா
ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவணமும்
சில வாரங்களுக்கு முன்பிருந்தே கன்னட எதியூரப்பா கோவில் கோவிலாக சுற்றிவரத்தொடங்கினார். பாஜக பக்தர்களிடம் கேட்டால், அக்டோபர் மாதம் வந்தாலே அது எதியூரப்பாவைப் பிடித்து ஆட்டும் என்று கடந்த நிகழ்வுகளை அள்ளி வீசுகிறார்கள். 2007 அக்டோபரில் மஜத கட்சி ஆட்சி மாற்றத்திற்கு சம்மதிக்காததால் ஆட்சியை இழந்தார். 2008 அக்டோபரில் த்லைமையிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று பிரச்சனை கிளம்பியது. 2009 அக்டோபரில் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறும் நிலைக்குப் போனார். 2010 அக்டோபரில் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது … ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.