மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்

  தமிழ் திரைப்படங்கள் நடப்பு யதார்த்தங்களை களமாக கொண்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், இயக்குனர்களும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே. அதனால், சில படங்களில் அவர்கள் அறியாமல் கதைப்போக்கில் அது ஊடுருவி விடுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த மங்காத்தாவில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகளே திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கதை வெளிவந்து பரவலாக வரவேற்பை பெற்றது, இப்போது மௌனகுரு.   மங்காத்தாவுக்கும் மௌனகுருவுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசம் உண்டு. மங்காத்தாவில் அந்த யதார்த்தம் தான் கதைநாயகன், … மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி

மீண்டும் குஜராத் போலி மோதல் கொலைகள் இந்திய ஊடகங்களில் வலம் வருகிறது. ஒரு அலையைப் போல் சில நாட்கள் பேசப்படுவதும், அடங்கிவிடுவதும் பின் வேறொரு நாளில் மீண்டும் எழுவதும் என இதன் ஏற்றவற்றங்களினால் பெறப்படவேண்டிய உண்மை ஆழ்கடலில் மூழ்கிப் போயுள்ளது. தேர்தல் லாபத்திற்காக நடத்தப்பட்ட கொலைகள் என்று காங்கிரசும், நாட்டில் ஆயிரக்கணக்கில் போலி மோதல் கொலைகள் நடந்திருக்கும் போது குஜராத்தை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என்று பாஜக வும் மெய்யான அதன் கிடக்கையை பேசுபொருளாக்குவதில் இருந்து … போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.