அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்

உழைக்கும் பெண்களே! மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. .. ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை … அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் … இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?

கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது.  அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

மொசாம்பிக்கில் புகையத் தொடங்கி, துனீசியாவில் பற்றி எரிந்து, எகிப்தின் வழியாக ஏமன், ஈரான், பஹ்ரைன் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது மக்கள் கிளர்ச்சி எனும் நெருப்பு. துனீசியாவின் பென் அலியும், எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கும் தப்பியோடிவிட்டனர். ஒரு வழியாக மக்கள் சீற்றம் தணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்தனரோ, எந்த நிலமை மக்களை போராடத்தூண்டியதோ அவை தக்கவைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வென்றது யார்? போராடிய மக்களா? திரை மறைவில் ஆடப்பட்ட சதுரங்கங்களினால் மக்கள் வெற்றியின் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருப்பதைப் போன்ற … அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!

தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். … தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.