மனிதர்களுக்கு வேலை காலி இல்லை

தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. புதிய, புதிய தொழில்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய தொழில்களோடு புதிய வசதிகளும், அதனை செய்வதற்கு புதிய புதிய சேவைத் தொழில்களும் வந்து கொண்டே இருக்கின்றன. புதியதாக ஒரு தொழில்நுட்பம் வந்தால், பழைய தொழில்நுட்பத்தை வைத்து செய்யப்பட்ட வேலைகளும் மாறுகின்றன. வங்கி, தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்டு அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்த்த மாற்றங்கள் மட்டுமல்ல; நமது பணியிடத்திலும் அத்தகைய மாற்றங்களைப் பார்த்திருக்கிறோம். உற்பத்தி அசெம்பிளி லைனில் தொழிலாளர்களின் இடத்தில்…

பிளாஸ்டிக் அரிசி: மூளையை அடகு வைக்கலாமா?

  இன்றைய தேதியில் பயனுள்ள தகவல் குறிப்பு என்றால் அது, “பிளாஸ்டிக் அரிசையை கண்டுபிடிப்பது எப்படி?” என்பது தான். அந்த அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பரப்பப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன என்றாலும் தற்போது தமிழக அரசே இதை முன்னின்று பரப்பியதைப் போல தெரிகிறது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய குழு அமைத்து நடவடிக்கை,…

அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?

  தோழர் செங்கொடி,   மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.   கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித…

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

“உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது…மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன…நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன” என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.   “உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு…

இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது

வணக்கம் ராஜ்ரம்யா, ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல இலுமினாட்டி எனும் சொல் சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை விளக்குவதற்கு வேறொரு புள்ளியிலிருந்து தொடங்கலாம். ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து உலகெங்கும் தற்போது வலதுசாரி அமைப்புகள் தலை தூக்கி வருகின்றன. தேர்தல் வெற்றிகளை சம்பாதித்திருக்கின்றன. இதை ஆராய்வோர்கள், உலகின் இந்த போக்கு கம்யூனிசம் தோல்வியடைந்து வருவதன் குறியீடு என்கிறார்கள். அதாவது, கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பார்கள். தங்களுடைய பிரச்சனைகளை கம்யூனிஸ்டுகள் மூலம் தீர்த்துக் கொள்ள…

மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!

8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான். 8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை…

பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம்.   விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய…

ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?

அண்மையில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது ஜோக்கர் தான். சமூக வலைத் தளங்கள் எழுதப்பட்ட மதிப்புரைகள், பார்த்தவர்களிடம் கேட்ட கருத்துகள் அனைத்துமே சிறப்பான படம், சமகால அரசியலை படம் பிடித்துக் காட்டும் படம் என்பதாகவே இருந்தன. இவையே, படத்தை பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது, கூடவே, ‘வாழ்வது தான் கஷ்டம் என்றால் இப்போது பேலுவதும் கஷ்டமாகி விட்டது’ எனும் அதன் விளம்பர வாசகம். சிறந்த அரசியல் நையாண்டிப் படமாகவே இருக்கிறது. ஆனாலும்,…

இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?

கடந்த பத்து நாட்களாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. அதனை எரியவைத்துக் கொண்டிருக்கும் இந்திய இராணுவத்தின் கொடூர முகம் கண்டு சமூக நலன் பேணும் உள்ளங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. உணர்வின் உந்துதலால் எடை மிகக் கூடிப் போயிருக்கும் காஷ்மீர் இளைஞர்களின் கையிலிருக்கும் சிறுகற்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நெருப்பின் அண்மைக்கால தொடக்கப் புள்ளியாய் இருந்தது புர்ஹான் வானி. குளிர் ஏரிகளும், பனிமலையுமாய் சொர்க்க பூமியாய் தெரிந்த காஷ்மீர் தன் மேலோட்டைப் பிய்த்துக் கொண்டு எரிமலையாய் வெடித்துச் சீறிக் கொண்டிருக்கிறது…

ஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகளா?

தோழர் செங்கொடி, தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. எனது அடுத்து கேள்வியை தொடுக்கிறேன். ஜப்பான் நாட்டின் உண்மையான சூழல் என்ன? அங்கே இருப்பது என்ன வகையான பொருளாதார முறை? கடுமையான உழைப்பாளிகள் அந்த மக்கள் என்கிறார்கள்…அங்கே ஸ்டிரைக் எனபதே அளவுக்கதிகமாக பணி செய்வதுதான் என்று புளங்காகிதம் அடைகிறார்கள், பழமையும் புதுமையும் கலந்த நாடு என்று வேறு மெச்சுகிறார்கள். உண்மையிலயே அந்த நாடு எந்த மாதிரியானது?   நண்பர் பிரசன்னா,   ஜப்பான் நாட்டின் சூழல் என்றால் எது…