மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஏங்கல்ஸ்
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது … லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எது சைத்தானின் படை? 1
கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா … எது சைத்தானின் படை? 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரோமாபுரியில் குலமும் அரசும் – 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 22 ரோமாபுரி நிறுவப்பட்டதைப் பற்றிய கட்டுக்கதையின்படி, பல லத்தீன் குலங்கள் (100 குலங்கள் என்று கட்டுக்கதை கூறுகிறது) ஒரு இனக்குழுவாக ஒன்றுசேர்ந்து முதன்முதலாக குடிபுகுந்தன. நூறு குலங்களைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சபேல்லியன் இனக்குழுவும் விரைவில் அங்கே குடிபுகுந்தது; கடைசியில் நூறு குலங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட, பலவிதமான அம்சங்களைக் கொண்ட மூன்றாவது இனக்குழுவும் வந்து அவற்றுடன் சேர்ந்து கொண்டது. இங்கே குலம் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்துமே இயற்கைப் … ரோமாபுரியில் குலமும் அரசும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
அதீனிய அரசின் உதயம் – 3
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 21 ஒரு இனக்குழுவில் இப்படிப்பட்ட பத்து அலகுகள் (டேம்கள்) இருந்தன. பழைய குல இனக்குழுவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது ஸ்தல இனக்குழு என்று இப்பொழுது சொல்லப்பட்டது. ஸ்தல இனக்குழு என்பது சுயாட்சியுள்ள அரசியல் நிறுவனம் மட்டுமின்றி, ஒரு இராணுவ அமைப்புமாகும். அது ஒரு பிலார்ஹை, அதாவது இனக்குழுவின் தலைவனைத் தேர்ந்தெடுத்தது, அவன் குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கினான்; மேலும், அது காலாட்படைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு டாக்ஸியார்ஹையும் இனக்குழுப் பிரதேசத்தில் … அதீனிய அரசின் உதயம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
அதீனிய அரசின் உதயம் – 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 20 சொலோனுக்கு முன்பு, திட்டவட்டமாகக் கூற முடியாத ஒரு காலத்தில் ஒவ்வொரு இனக்குழுவிலும் பன்னிரண்டு நௌக்ரரிகள் எனப்படும் சிறு பிரதேச மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு நௌக்ரரியும் ஒரு யுத்தக் கப்பலைத் தயாரித்து அதனுடன் சாதனமும் நபர்களும் தர வேண்டியிருந்தது. மேலும், இரண்டு குதிரை வீரர்களையும் அனுப்ப வேண்டும். இந்த ஏற்பாடு குல அமைப்பை இரண்டு முனைகளில் தாக்கியது: முதலாவதாக, அது உருவாக்கிய சமூக அதிகாரம் ஆயுதமேந்திய மக்கள்தொகை மொத்தத்துடன் … அதீனிய அரசின் உதயம் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
அதீனிய அரசின் உதயம் – 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 19 அரசு எப்படி வளர்ச்சியடைந்தது, குல அமைப்பின் சில உறுப்புகள் எப்படி மாற்றப்பட்டன, புதிய உறுப்புகள் தோன்றியதால் வேறு சில எப்படி அகற்றப்பட்டன, முடிவில் எல்லாமே உண்மையான அரசாட்சி உறுப்புகளால் எப்படி அழிக்கப்பட்டன, குலங்கள், பிராட்ரிகள், இனக்குழுக்கள் மூலம் தற்காத்து கொண்டிருந்த உண்மையான “ஆயுதமேந்திய மக்களுக்கு” பதிலாக அரசாட்சி உறுப்புகளின் சேவையிலிருக்கின்ற, ஆகவே மக்களுக்கு எதிராகவும் உபயோகிக்கப்படக் கூடிய ஆயுதமேந்திய “சமூக அதிகாரம்” எப்படி ஏற்பட்டது? இவை அனைத்தையும் … அதீனிய அரசின் உதயம் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
இராகோஸ் குலம் 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16 பிராட்ரியில் சில குலங்கள் அமைந்திருந்தது போலவே மூலச்சிறப்பான வடிவத்தில் சில பிராட்ரிகளும் ஒரு இனக்குழுவாக அமைந்திருந்தன. சில சமயங்களில், மிகவும் பலவீனமான இனக்குழுக்களுக்குள் மத்திய கண்ணியாகிய பிராட்ரி இல்லாதிருந்தது. அமெரிக்காவிலுள்ள செவ்விந்திய இனக்குழுவின் தனித்தன்மையான குணாம்சங்கள் எவை? 1. அது சொந்த நிலப்பரப்பும் சொந்தப் பெயரும் கொண்டிருப்பது. ஒவ்வொரு இனக்குழுவும் எதார்த்தத்தில் குடியிருக்கின்ற பிரதேசத்துடன் கூடுதலாக வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் கணிசமான பிரதேசத்தைப் பெற்றிருந்தது. அதன் பிரதேசத்துக்கும் அடுத்த … இராகோஸ் குலம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 9
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 14 குட்ரூன் [13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய மகாகாவியம்] நூலிலும் இதேதான் நடக்கிறது. அதில் அயர்லாந்தின் ஸிகெ பாண்ட் நார்வே நட்டைச் சேர்ந்த உட்டேயை மணக்கவும், ஹெகெலிங்கன் நாட்டைச் சேர்ந்த ஹெடல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹீல்தேயை மணக்கவும் முயல்கிறார்கள். கடைசியாக, மோர்லாந்து நாட்டு ஸிக்ஃபிரிடும் ஓர்மனியின் ஹார்ட்முதும் ஸீலாந்தின் ஹெர்விக்கும் குட்ரூனை மணக்க முயல்கின்றனர். இங்கேதான் முதல்தடவையாக, குட்ரூன் தன் சுயவிருப்பப்படி கடைசியாக சொல்லப்பட்ட நபரை … குடும்பம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 4
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 9 3.இணைக் குடும்பம். குழு மணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ ஒரு வகையான இணை வாழ்க்கை இருந்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக (அவனுக்கு மிகப் பிடித்தமான மனைவி என்று அவளைக் கூறுவதற்கு அநேகமாக இடமில்லை) இருந்தாள். அதே போல், அவளுடையா பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான். இந்த நிலைமை கிறிஸ்துவ … குடும்பம் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.