முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை

உலகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும், உயரத்துக்கு ஏற்ற எடையும் இன்றி நோஞ்சான்களாக உயிர் வாழும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம் ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல் உலகப் பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில் வெளியாகி இருக்கிறது. வழமை போலவே இந்தியா இந்தப் பட்டியலில் பிந்தங்கி இருப்பதோடு - 107 … முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி

2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அந்த ஆண்டில் நல்ல மழை பெய்தால் கூட எங்கள் மோடிஜி யால் தான் மழை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று புழகமடைந்து போகும் பக்தாள்கள் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின் இடதுசாரி என்று தூற்றினார்கள். (இடதுசாரி என்பது வசைச் சொல்லா?) … கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

ஜக்காத், ஜஸ்யா இந்த இரண்டு வரி விதிப்புகள் குறித்து தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. ஏனென்றால் ஜக்காத் எனும் வரிவிதிப்பை மிகப் பெரும் பொருளாதாரத் திட்டமாக இஸ்லாமியர்களாலும், இஸ்லாம் ஏனைய மதத்தவர்களை வதைப்பதன் அடையாளமாக ஜஸ்யா எனும் வரிவிதிப்பை இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகப் பெரியதாக ஊதிப் பெருக்குகின்றனர். இந்த இரண்டு வித வரிகள், இதுவல்லாத எப்படி வியாபரம் செய்யலாம், செய்யக்கூடாது என்று குரானிலும் ஹதீஸிலும் இருக்கும் நன்னெறிப் போதனைகள், வட்டியில்லா வங்கி உள்ளிட்டவற்றைச் சேர்த்துத்தான் இஸ்லாமியப் பொருளாதாரம் … இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா?

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம். வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! … இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.   “சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து … மட்டக் குதிரை…!-ஐ படிப்பதைத் தொடரவும்.