பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?

செய்தி: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் … பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்

“அவர்கள் போராடுவது இனி பயனற்றது என இந்த உலகிற்கு சொல்ல நினைக்கிறார்கள்(…) அதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.  இந்த சமூக அமைப்பு ஒரு மோசடி; நம்மை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த சமூக அமைப்பு நம்மை  காப்பாற்றவில்லை; இந்த அரசு, இந்த விஞ்ஞானிகள் யாரும் நம்மை காப்பாற்றவில்லை. நாம்தான் நம்மை பாதுகாத்துள்ளோம். மக்கள்தான் மக்களைப் பாதுகாத்துள்ளோம்.” டார்க் வாட்டர்ஸ் திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாக வரும் காட்சியின் வசனங்கள் இவை.  சூழலியல் பற்றிய ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது … டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களியம்

உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்

கடந்த வாரம் முழுவதும் உலகெங்குமுள்ள ஊடகங்களின் ஒட்டுமொத்தச் செய்தியும் இது தான் - உலகை உறைய வைத்த அய்லான் குர்தி. துருக்கியின் கடற்கரை ஒன்றில் மணலில் முகம் புதைந்தபடி குப்புறக் கிடந்த ஒரு சிறுவனின் உடல். இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து அகதிகளின் மேல் உலகின் கவனம் குவிக்கப்பட்டதைப் போல ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் அகதிகளை வரவேற்கும் ஜெர்மனியின் இளக்கம் எடுத்துக் காட்டப்படுவதில் தொடங்கி, உலக நாடுகள் அகதிகள் குறித்த தங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்ய … அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 5  தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம்.   2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் ‘திட்டமிட்ட’ கலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் … பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 4 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க   உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல … ‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 3 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க   தமிழ் இந்து வின் உக்ரைன் தொடர் மூன்றாம் பகுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதை விவரித்திருக்கிறது, தன்னுடைய வழக்கமான வேலையுடன். முன்னதாக இரண்டாம் பகுதியின் கடைசியில், \\\சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா … ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 2 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது … பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன். ஒரு சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக உலகின் முன் இருந்தது. இன்றைய செய்திகளின் நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் இப்போது இல்லை. என்றாலும் உக்ரைன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த உக்ரைன் பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டாம் தேதியிலிருந்து தமிழ் இந்து நாளிதழில் ஆறு நாட்கள் தொடராக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களுக்கு உக்ரைன் பிரச்சனை குறித்த செய்திகளை … உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

தொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது. இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் … சோவியத் யூனியனின் அற்புதங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.