தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

  .. .. .. காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவி வந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் மேல்ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு பொருளாதாரம் சமூக நீதி உள்ளிட்ட தளங்களில் போராடிக் கொண்டிருந்த மக்களின் மீது அவர் இரக்கம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும், “சகோதரனுக்கு எதிராக அறப் போராட்டமா?” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் … தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

கடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் … காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் மட்டும் தொடர்பு கொண்டதோ என சிந்திக்கும் அளவுக்கு பலரும் முத்தலாக் பற்றி மட்டுமே கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டும் தானா எனும் எண்ணமும் வருகிறது. ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில், பொது சிவில் சட்டம் பரவலாய் பேசப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சில ஊர்களில் பொது சிவில் சட்டம் குறித்த … பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

தலை ஒட்டிய கடவுளும் தலை வெட்டும் வெறியர்களும்

ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். தொடக்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை, வெள்ளையனுக்கு எதிரான போராட்ட உணர்வை ஊட்டிய, மராட்டியத்தில் திலகர் தொடங்கிய பிள்ளையார் விழா இன்று கலவரங்களை உருவாக்குவதாய் மாறிவிட்டது என்று வருத்தப்பட்டார். கடந்த ஒன்றாம் தேதி (01/09/2016) தமிழ் இந்துவில் சில காவல்துறை அதிகாரிகளின் செவ்விகளை உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. சுவாதி, சோனாலி, பிரான்சினா ஆகிய மூவரும் ஒருதலைக் காதலினால் கொல்லப்பட்டதாக சொல்வது தான் அதன் உள்ளடக்கம். சோனாலி, பிரான்சினா சரிதான். ஆனால், சுவாதி … தலை ஒட்டிய கடவுளும் தலை வெட்டும் வெறியர்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்

பெரியாரியம் , அம்பேத்கரியம் , மார்க்சியம்  கொஞ்சம் எளிமையா தெளிவு படுத்துங்க தோழர். திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா, பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் இவை மூன்றும் தனித்தனியான, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இயங்களல்ல. நோக்கங்களால் ஒன்றியவை. தனித்தனியாக குறிப்பிடப்பட்டாலும் இவைகளை இணைக்கும் மையச் சரடு தலித்தியம். அந்த வகையில் முன்னிரண்டைக் காட்டிலும் மார்க்சியம் முழுமையானது. பெரியாரியம், அம்பேத்காரியம் என்பவை தலித்தியம் எனும் சொல்லின் பின்னுள்ள அரசியல் தொழிற்பாடுகளால் தனித்தனியானதாக உயர்த்தப்படுபவை. இங்கு … பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?

  தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள்.   நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான … உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.