காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்

கடந்த வாரத்திலிருந்து காஷ்மீர் ஒரு செயற்கையான கொதிப்பு நிலைக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகளை புதைத்து வைத்திருந்தது என்றார்கள். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடிகளுடன் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது யார் காதிலும் கேட்கவே இல்லை….

காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால்

இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது. தெளிவாகச் சொன்னால், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கும்பலின் திட்டம் எனும் போர்வையில் ஒரு தீப்பொறியைப் போல இந்தப் பிரச்சனை பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்து முஸ்லீம் பிரச்சனை போல மக்களிடையே பரப்படுகிறது. ஆனால் கடலில் மிதக்கும் பனிப்பாறையில் வெளியில் தெரிவதை மட்டும் பார்ப்பது எப்படி ஆபத்தானதோ அதைவிட பலமடங்கு பேராபத்தானது காஷ்மீர்…