நடுவுல ‘U’ வந்துடுச்சா ரவி?

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க

வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?

நாட்டில் இலவசங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி தொடங்கி வைத்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா வழக்காக வழிமொழிந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “திமுக மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” … வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை?

செய்தி: கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் … எது வன்முறை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை

கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடியரசு தினத்தை புறக்கணிப்போம்

இந்த தலைப்பைப் பார்த்ததும், குடியரசு தினத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்றொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டாய ஒப்பத்தங்களுக்கு ஏற்பவும், உள்நாட்டு தரகு முதலாளிகள் அல்லது வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு அரசை, இறையாண்மையுள்ள குடியரசு என்று ஏற்க முடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இது மாநில அரசுகளின் உரிமை சார்ந்தது. ஒன்றிய அரசின் அத்துமீறல் சார்ந்தது. எதிர்வரும் ஜனவரி … குடியரசு தினத்தை புறக்கணிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிபிஎஸ்இ: தேர்வுக் கேள்வியா? பண்பாட்டுத் திணிப்பா?

செய்தி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. கடந்த 11ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அந்த வினாத்தாளில் பிரிவு ’ஏ’ பகுதியில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என்றுக் கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் ” இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்குப் பெமினிசம்தான் காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை. திருமணமான பெண்கள் வேலைக்குச் … சிபிஎஸ்இ: தேர்வுக் கேள்வியா? பண்பாட்டுத் திணிப்பா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? இது பற்றி  இன்று வெவ்வேறு நாளிதழ்களும் வெளியிட்டிருக்கும் தலைப்புகள், உண்மையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பிரதிபலிப்பனவாக இல்லை. காலிஸ்தானி, மாவோயிஸ்டு, காங்கிரஸ், பாக்-சீனா தூண்டுதல்… என்று சங்கிகள் செய்த எந்த அவதூறும் எடுபடாத நிலையில், அவர்கள்  உச்ச நீதிமன்றத்தைச் சரண் புகுந்திருக்கிறார்கள். National Capital Territory ஐச் சேர்ந்த 20 லட்சம் குடிமக்கள், குறிப்பாக நொய்டா – குர்கான் பகுதிகளைச் சேர்ந்த மிடில் … போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?

செய்தி: சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 42-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கடன் பெற்றுமாநிலங்களுக்கு வழங்குவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. கடந்த வாரம் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி. தமிழகத்துக்கு கடந்த ஜூலை வரையிலான இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த … ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.