நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தல் முடிவுகள் பல முரண்பாடுகளை உள்ளடக்கி வந்திருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீண்டிருக்கிறது. கடந்த முறை முதல்வராக இருந்த, இந்த முறையும் முதல்வராகப் போகின்ற நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட மிக அதிகமான இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் நிதீஷ் தான் முதல்வர் என அறிவித்திருக்கிறது. இந்த முரண்பாடுகளை இணைத்துப் பார்த்தால் … பீகார் தேர்தலில் வென்றது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஓட்டுக்கட்சி
பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா
2018 -2019 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ஜெட்லியால் அறிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அரசியல் கட்சியினரும், அறிவுத் துறையினரும் இன்னும் பிறரும் நிதிநிலை அறிக்கை குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய பொதுவான கருத்து என்னவாக இருக்கிறது என்றால், குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இழுபறியான வெற்றியினாலும், சில மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்தடுத்து வரவிருப்பதாலும் தங்கள் மீது வெறுப்புற்று இருக்கும் விவசாயிகள், நடுத்தர மக்கள் மீது கரிசனம் கொண்டு நிதி நிலை அறிக்கையை … பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?
மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர் சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல … ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அதிமுக வெற்றி மக்கள் முடிவா?
பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?
தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான … திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் குறிப்பிட விரும்புகின்றன அனைத்து ஊடகங்களும். அதாவது பொய்யாக சொல்லிக் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளைக் கூட காற்றில் கடாசி விட்டு காசுக்காகவும், சீட்டுக்காகவும் மாறி, மாறி; மாற்றி மாற்றி பேசுவதையும் செயல்படுவதையும் தேர்தல் ஜுரம் என அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். இதுவரை ஓட்டுக் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தமிழக தேர்தல் களத்தில், அந்தக் கட்சிகளுக்கு நிகரான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் கமிசன். அதாவது, … தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்
நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட … முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்
காவிரி மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது. எதை எப்போது கிளப்பிவிட்டு திசை திருப்பி தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் முனைவர் பட்டம் தந்துவிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு குருதி அழுத்தத்தை எகிரவைத்த கணக்குகள் பேரங்கள் முடிந்து ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தமிழகத்தில் வரிசையாக கட்சிமாறிக்கொண்டிருந்த பலவீனத்திலிருந்து மீண்டு அதிமுக கூட்டங்களின் மூலம் பலம் காட்டிக்கொண்டிருந்ததை மறைத்து போக்குக்காட்ட கருணாநிதிக்கு மக்களை பேசவைக்க ஒரு பிரச்சனை தேவைப்பட்டது. அவ்வளவு தான் இவர் வழக்கம்போல் கடிதம் … காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவணமும்
சில வாரங்களுக்கு முன்பிருந்தே கன்னட எதியூரப்பா கோவில் கோவிலாக சுற்றிவரத்தொடங்கினார். பாஜக பக்தர்களிடம் கேட்டால், அக்டோபர் மாதம் வந்தாலே அது எதியூரப்பாவைப் பிடித்து ஆட்டும் என்று கடந்த நிகழ்வுகளை அள்ளி வீசுகிறார்கள். 2007 அக்டோபரில் மஜத கட்சி ஆட்சி மாற்றத்திற்கு சம்மதிக்காததால் ஆட்சியை இழந்தார். 2008 அக்டோபரில் த்லைமையிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று பிரச்சனை கிளம்பியது. 2009 அக்டோபரில் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறும் நிலைக்குப் போனார். 2010 அக்டோபரில் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது … ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….
பதினைந்தாவது மக்களவைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன இந்திய தேர்தல் முறையை. நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிகம் வன்முறையின்றி அமைதியாக குறித்த காலத்தில் நடத்திமுடிக்க முடிவதே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் வெற்றிச்சான்றிதழ். என்றெல்லாம் ஏற்றிப்போற்றப்படும் தேர்தல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. விரலில் அது ஏற்படுத்தும் அழியாத கரையைப்போலவே மக்கள் வாழ்விலும் அழியாத கரையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறது. யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், … ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….-ஐ படிப்பதைத் தொடரவும்.