கந்துவட்டி அரசை எரிப்போம், வாருங்கள்.

  கண் முன்னே இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே தீப்பற்றி எரிவதை காண நேர்வது எத்தனை கொடூரமானது? 23.10.2017 திங்கட்கிழமை காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனதை பதற வைக்கும் அந்த திடுக்கிடும் நிகழ்வு நடந்தது. சுற்றி இருந்த மக்கள் கிடைத்த தண்ணீரையும், மணலையும் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஆனாலும் தீயின் நாக்குகள் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் பெற்றோரையும் தின்று தீர்த்தன. தீயின் நாக்குகளை விட கந்து வட்டியின் கொடுங் கரங்கள் எத்தனை வன்மமான … கந்துவட்டி அரசை எரிப்போம், வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் … ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..

காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு (ஆடு தாண்டும் காவிரி) எனும் இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. பெரும்பாலான இடங்களில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்றாலும், மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடந்தது என்று கூற முடியவில்லை. ஏன் இது உணர்வுபூர்வமான பிரச்சனை இல்லையா? தமிழகம் கடைமடை மாநிலமாக இருப்பதன் … ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

உணவுப் பாதுகாப்பு சட்டமா? உணவு பறிப்புச் சட்டமா?

அண்மையில் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்த உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது அனைத்து ஓட்டு அரசியல் கட்சிக்காரர்களும், நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் விவாதங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டமே பேசு பொருளாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபி என்கிறார், எதிர்க்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அளவு குறைகிறது, விலை குறிப்பிடப்படவில்லை என்கிறார். இப்படி இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பதாக காட்டிக் கொள்பவர்களும் சில அம்சங்களை முன்வைத்து … உணவுப் பாதுகாப்பு சட்டமா? உணவு பறிப்புச் சட்டமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்கள் ஆயுதம் ஏந்துவது வன்முறையா?

கடந்த சில நாட்களாக ஓட்டுக்கட்சி அரசியல் வியாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒருவர் மாற்றி ஒருவராக கண்டன அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி தில்லியிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்கிறார். இந்திய இளைஞர்கள் எங்கே போகிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார் பிரணாப் முகர்ஜி. அந்த இளைஞரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிறர் முலாயம். ஊழல் பஜனைவாதி ஒருவர் ஒரு அறைதானா என்று அடக்க முடியாமல் கேட்டு வைத்திருக்கிறார். இப்படி அறிக்கை மேல் அறிக்கையாக விட்டு இதை … மக்கள் ஆயுதம் ஏந்துவது வன்முறையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?

  தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள்.   நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான … உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.