தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கேஜ்ரிவால் பெருவெற்றி அடைந்திருப்பது ஓட்டுக்கட்ட்சி அரசியல்வாதிகளிடையே சலசலப்பையும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தேர்தலுக்கு முன்பாகவே முடிவு தெரிந்ததைப் போல் சுரத்தின்றியே காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை கொட்டிக் கொண்டிருந்தன. அதிலும் மோடியை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு ‘செயற்கரிய’ அனைத்தையும் செய்தன. ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும் … தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஓட்டுக் கட்சி
ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்
இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள். இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது. ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம். … ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?
தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான … உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு
கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர். சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர். காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள். அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா? செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் … சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.