அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான … திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் குறிப்பிட விரும்புகின்றன அனைத்து ஊடகங்களும். அதாவது பொய்யாக சொல்லிக் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளைக் கூட காற்றில் கடாசி விட்டு காசுக்காகவும், சீட்டுக்காகவும் மாறி, மாறி; மாற்றி மாற்றி பேசுவதையும் செயல்படுவதையும் தேர்தல் ஜுரம் என அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். இதுவரை ஓட்டுக் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தமிழக தேர்தல் களத்தில், அந்தக் கட்சிகளுக்கு நிகரான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் கமிசன். அதாவது, … தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

            2011 தேர்தலின் போது எழுதப்பட்ட பதிவு இது.  காலம் கடந்திருக்கிறது. ஆனால், நிலமை இன்னும் அது தானே. எனவே, மீள்பதிவு. ************************************************************ வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்த‌ப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?

  தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள்.   நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான … உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெற்றி அதிமுகவிற்கு பரிசா? தோல்வி திமுகவிற்கு தண்டனையா?

இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்திருப்பது குறித்து பலரும் எழுதியும் பேசியும் முடித்து விட்டனர். ஜெயலலிதா கூறியிருப்பது போல் அவர்களே எதிர்பாராத அளவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. திமுக தான் வெல்லும், அதிமுக தான் வெல்லும் என்று ஆரூடம் கூறிய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கூட இரண்டு கூட்டணிக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் எனத் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சி எனும் தகுதி(!)யைக்கூட திமுக இழந்து போகும் என எவரும் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் இருநூறு … வெற்றி அதிமுகவிற்கு பரிசா? தோல்வி திமுகவிற்கு தண்டனையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும். இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை … இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தலை புறக்கணிப்போம், புரட்சி செய்வோம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்த‌ப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் பொதுத்தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் பணநாயக ஓட்டுத்தலைவர்கள். நாங்களும் செயல்படுகிறோம் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் பணத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்யும் தேர்தல் கமிசன் மீது 'குடி'மக்கள் தாக்குதல் தொடுக்க … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்

ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக‌ அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி … ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.