நேற்று அரசுப் பேரூந்து நடத்துனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 15ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்கு உவப்பான முடிவை எட்டாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது குறித்து அவருக்கு உளச் சோர்வு இருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோருக்கு இதே எண்ணம் தான் இருக்கக் கூடும். ஒரு போராட்டம் வெற்றியடைவது அல்லது சரியான திசையை நோக்கிச் செல்வது என்பது, போராடும் பிரிவினருக்கு அப்பால் சமூகத்தின் பிற மக்கள் அந்தப் போராட்டம் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. … போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.