சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கடவுள்
கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே
அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள். “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீண்டும் ஒரு விவாதம்
கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை
மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
சனாதனம் எனும் நஞ்சு
ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு … சனாதனம் எனும் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்து மதப் பண்டிகைகள்
இன்று விநாயகர் சதூர்தியாம். கொரோனாவால் இந்தக் கூத்துகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கடவுளை வைத்து வழிபடுவதற்கும், கடவுளை வைத்து அரசியல் செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. பிற மதத்தினர் செய்வதெல்லாம் கடவுளை வைத்து வழிபடுவது தொடர்பான திருவிழாக்கள், இந்து மதத்தில் செய்யப்படுவதெல்லாம் கடவுளை வைத்து அரசியல் செய்வது தொடர்பான விழாக்கள். ஆனால் இதில் சிக்கல்கள், தடைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள், கடவுளை வழிபட தடை விதிக்கிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரசியல் கடவுளை, … இந்து மதப் பண்டிகைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தெய்வீகத் திருடர்கள்
மூத்த தேவியைமூதேவி ஆக்கினான். அடங்கா பிடாரியைதுஷ்ட தேவதையாக்கிஅடங்கும் புராணம் பாடிஇஷ்ட தேவியாக்கினான். அரசமரத்தடி எங்குமிருந்தபுத்தர் சிலைகளைஆட்டயப் போட்டான்.சத்தமில்லாமல் அங்கேவிநாயகர் சிலைகளை நட்டான். சமணப்பள்ளிகள் அழித்தான்சைவத் திருமுறை ஒழித்தான்.தமிழ்ஏடுகள் ஆற்றில் விடும்சடங்குகள் செய்தான்.சேயோன் மாயோன்கவிழ்த்தான்.சுரண்டும் வர்க்கக் கூட்டணிக்குமனுதர்மமாகப் புழுத்தான்! பார்வதி பக்கமிருக்கசிவன் தலையில்கங்காதேவி சேர்த்துவிட்டான்.உரிய வள்ளி இருக்கதிருமுருகனோடுதெய்வானை கோர்த்து விட்டான். சிறுதெய்வங்களை எல்லாம்ஆரிய அவதாரங்களின்அடிப்பொடியாக்கினான்.அறுவகைச் சமயமிருக்கஇல்லாத இந்துமதத்திற்குஎல்லாமும் படியாக்கினான். சொந்த முருகனைஆரியஸ்கந்தனாக்கினான். வேதக் கடவுளரைவீசி எறிந்துவிட்டுதமிழ்நிலபௌதீகக் கடவுளரைபார்ப்பன முலாம் பூசிகதையைக்கந்தலாக்கினான். கோயிலென்றும்இறையிலியென்றும்ஆளும் வர்க்ககூட்டுக் கொள்ளையில்கோயில் கருவறைதனதாக்கினான். தமிழ்மொழி குரல்வளைநெறித்தான்.சமஸ்கிருத … தெய்வீகத் திருடர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?
இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாம்: விவாத நேர்மை
விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
கம்யூனிசத்தின் உயிர்
இன்று மாமேதை, பேராசான் மார்க்ஸின் 202 ஆவது பிறந்த நாள். உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்க விரும்பிய அந்த மாபெரும் மேதையின் கனவு இன்னும் நனவாகவில்லை. அதை நோக்கிய நகர்வில் இருக்கிறோமா என தன்னைத் தானே ஆய்வு செய்வதும், அந்த திசையில் பயணிப்பதை உறுதி செய்வதுமே நம்மையும், சமூகத்தையும் மேன்மைப் படுத்தும். கயூனிஸ்டுகள் யாரும் மார்க்ஸை கடவுளாக கருதுவதில்லை. மூலதனம் நூலை வேதமாக கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள், வேதம் போன்ற சொற்களின் பொருள், நடப்பு உலகை அப்படியே தக்க … கம்யூனிசத்தின் உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.