அன்பார்ந்த தோழர்களே, இன்று நவம்பர் 7. உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு - அவர்கள் அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும், - அதுவரையிலான வரலாற்றில் மக்களின் நல்வாழ்வுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். ரஷ்யப் புரட்சி நாளின் சிறப்பை இப்படி சொற்களுக்குள் சிறைப்படுத்தி விட முடியாது. என்றாலும், இந்த நாளை உணர்வு பொங்க கொண்டாடுவதற்கும், இங்கும் ஒரு புரட்சியைச் சமைப்போம் என்று சூளுரை ஏற்பதற்கும், இந்திய கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு தகுதி இருக்கிறதா? என்பது மிகப் பெரிய, பொருள் பொதிந்த, எதிர்கொள்ள … நமக்குள் நாமே கேட்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கட்சி
பிம்பச் சிறை
எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்
இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் குறிப்பிட விரும்புகின்றன அனைத்து ஊடகங்களும். அதாவது பொய்யாக சொல்லிக் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளைக் கூட காற்றில் கடாசி விட்டு காசுக்காகவும், சீட்டுக்காகவும் மாறி, மாறி; மாற்றி மாற்றி பேசுவதையும் செயல்படுவதையும் தேர்தல் ஜுரம் என அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். இதுவரை ஓட்டுக் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தமிழக தேர்தல் களத்தில், அந்தக் கட்சிகளுக்கு நிகரான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் கமிசன். அதாவது, … தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்
இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள். இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது. ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம். … ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!
ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும். இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை … இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.