கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும். கம்யூனிச கல்வி இயக்கம் கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், “கருத்துப் பரப்பலில், அணி திரட்டலில் சமூக வலைத் தளங்களின் பங்கு” தோழர் கீற்று நந்தன் ஆற்றிய உரையின் நூல் வடிவம் இது. அச்சு காட்சி ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும், அவர்களின் அடிவருடிகளின் கைகளிலும் இருக்கின்றன. என்றாலும் அதே கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கின்ற சமூக ஊடகங்களை மக்கள் தங்கள் செய்திகளை கொண்டு செல்ல பரவலாக்க பயன்படுத்த முடியும். … நமக்கான மாற்று ஊடகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கணிணி
மனிதர்களுக்கு வேலை காலி இல்லை
தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. புதிய, புதிய தொழில்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய தொழில்களோடு புதிய வசதிகளும், அதனை செய்வதற்கு புதிய புதிய சேவைத் தொழில்களும் வந்து கொண்டே இருக்கின்றன. புதியதாக ஒரு தொழில்நுட்பம் வந்தால், பழைய தொழில்நுட்பத்தை வைத்து செய்யப்பட்ட வேலைகளும் மாறுகின்றன. வங்கி, தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்டு அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்த்த மாற்றங்கள் மட்டுமல்ல; நமது பணியிடத்திலும் அத்தகைய மாற்றங்களைப் பார்த்திருக்கிறோம். உற்பத்தி அசெம்பிளி லைனில் தொழிலாளர்களின் இடத்தில் … மனிதர்களுக்கு வேலை காலி இல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்
எங்கும் செம்மொழி, எதிலும் செம்மொழி. மன்னிக்கவும், எங்கும் செம்மொழி மாநாடு, எதிலும் செம்மொழி மாநாடு. அனைத்து வகை ஊடகங்களும் அரசின் கவனிப்பில் (அல்லது கண்காணிப்பில்) திக்குமுக்காடிப் போய் செம்மொழி மாநாடு என்றே தீர்க்கின்றன. திருவிழாக்கூட்டம் போல் கோவை நிறைந்திருக்கிறது. பல்நாட்டு அறிஞர்கள் ஆய்வேடுகள் சாற்றுகிறார்கள். கலைச்சொற்கள் காற்றில் பரவுகின்றன. அக்கால மன்னர்கள் பரிசில் வழங்கியது போல், அறிஞர்கள் பட்டமும் விருதும் பெறுகிறார்கள். மக்கள் அரங்க அமைப்பையும், ஆரவாரத்தையும் கண்டு பேருவகை அடைகிறார்கள். ஆனால் தமிழ்? ஆய்வேடுகள் ஒப்பிக்கப்பட்டு … செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.